பிரபல நடிகை எதிரே வந்தும் கடமை தவறாத ஸ்விக்கி ஊழியருக்கு குவியும் பாராட்டு- வைரலாகும் வீடியோ
- ஸ்விக்கி ஊழியர் ஒருவர் உணவு டெலிவெரி செய்வதற்காக உள்ளே சென்றார்.
- ஸ்விக்கி ஊழியருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.
பொதுவாக நம் ஊரில் திரைப் பிரபலங்கள் பொது இடங்களில் கண்டுவிட்டால் அவர்களை ரசிகர்கள் சூழ்ந்துவிடுவது வழக்கம். சிலர் செல்பி என்ற பெயரில் அவர்களை நச்சரித்துவிடுவார்கள்.
நடிகர், நடிகைகள் என்றால் வாயடைத்து நிற்பவர்களுக்கு மத்தியில் தனக்கு கடமை தான் முக்கியம் என்று நடிகை எதிரே வந்தும் கண்டும் காணாமல் கடந்து தனது பணியை ஆற்றிய ஸ்விக்கி ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சலூன் ஒன்றுக்கு சென்றுவிட்டு நடிகை டாப்சி பன்னு வெளியே வந்தார். அவரிடம் பேட்டி எடுப்பதற்காக செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் என பலரும் வெளியே நின்று அவரை அழைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த ஸ்விக்கி ஊழியர் ஒருவர் உணவு டெலிவெரி செய்வதற்காக உள்ளே சென்றார். அப்போது, நடிகை டாப்சி ஸ்டைலிஷாக எதிரே வந்தார். ஆனாலும, ஸ்விக்கி ஊழியர் அவரை கண்டுக்கொள்ளாமல் தனது கடமையை செய்ய சென்றார்.
இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள்," எவ்வளவு பெரிய நடிகை வந்தாலும் தனக்கு கடமை தான் முக்கியம் என்று தனது பணியை செய்யும் ஸ்விக்கி ஊழியருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்" என பாராட்டி வருகின்றனர்.
23 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ காட்சியை, புகைப்பட கலைஞர் ஒருவர் ஸ்விக்கி பார்ட்னரை டேக் செய்து, ஸ்விக்கி ஊழியரின் கடமையை பாராட்டினார். அதில், "ஹே ஸ்விக்கி, இந்த டெலிவரி பார்ட்னர் தனது அர்ப்பணிப்புக்கு ஊக்கத்தொகைக்கு தகுதியானவர்" என குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த ஸ்விக்கி, "தொந்தரவு இல்லை. நெஞ்சில் ஈரம், மகிழ்ச்சி. என் பாதை. கவனம் செலுத்துகிறது. செழிக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தது.