உதயநிதியால் பழைய கூட்டணியுடன் கைக்கோர்க்கும் கமல்ஹாசன்
- நடிகர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக பொறுப்பேற்றார்.
- இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கவிருந்த படத்தில் இருந்து விலகுகிறேன் என்று உதயநிதி தெரிவித்திருந்தார்.
நடிகரும், சேப்பாக்கம்-திருவல்லிகேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக பொறுப்பேற்றார்.
உதயநிதி ஸ்டாலின்
இதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ள உதயநிதி, "இனிமேல் திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை. கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கவிருந்த படத்தில் இருந்து விலகுகிறேன். 'மாமன்னன்' திரைப்படம் தான் எனது கடைசி திரைப்படம்" என்று தெரிவித்திருந்தார்.
விஜய் சேதுபதி - கமல்ஹாசன்
இந்நிலையில், கமல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் தற்போது விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.