சினிமா செய்திகள்

மணிரத்னம்

'பொன்னியின் செல்வன்' படத்தில் ரஜினி நடித்திருந்தால் கதையை மாற்ற வேண்டியிருந்திருக்கும் - மணிரத்னம் விளக்கம்

Published On 2022-09-18 11:33 GMT   |   Update On 2022-09-18 11:33 GMT
  • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
  • இப்படத்தில் ரஜினிகாந்தை நடிக்க வைக்காதது ஏன்? என்பதற்கு இயக்குனர் மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.

'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வருகிற 30-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி சென்னை தரமணியில் 'பொன்னியின் செல்வன்' பட இயக்குனர் மணிரத்னம், நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

மணிரத்னம்

 

அப்போது இயக்குனர் மணிரத்னம் கூறியதாவது, பழங்காலத்தில் எடுக்கப்பட்ட சரித்திர படங்களின் ஆடைபோல் இல்லாமல் நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் ஆடைகள் வடிவமைக்கப்பட்டன. தூய தமிழ் வசனங்கள் தான், ஆனால் சரளமாக பேச முடியும். நடிகர்கள் உணர்வுகளை வெளிப்படுத்த கூடிய வகையில் இருக்கும். வசனம் தூய தமிழில்தான் எழுதப்பட்டது. இந்த படத்தில் நாவலுக்கு ஏற்ற வகையிலும், என் பாணியும் கலந்து இருக்கும். புத்தகத்தை படித்த பாதிப்பில் என்னுடைய பங்களிப்பும் இருக்கும். 5 பாக புத்தகத்தை 2 பாகம் 3 மணி நேர பாடமாக தந்து உள்ளோம்.

மணிரத்னம்

 

ரஜினியை நடிக்க வைக்காதது ஏன்? என்ற கேளிவிக்கு இயக்குனர் மணிரத்னம் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, ரஜினிகாந்த் கேட்ட கதாபாத்திரத்தில் அவர் நடித்து இருந்தால் கதையை மாற்ற வேண்டிய நிலை வரும். இது சரியாக இருக்காது என்றார்.

மணிரத்னம்

 

மேலும் அவர் பேசியது, சூட்டிங்கின்போது எல்லோரும் என்னை பாடாய் படுத்தினார்கள். நானும் எல்லோரையும் பாடாய் படுத்தினேன். வசனங்களில் ஜெயமோகன் சிறப்பாக செய்து உள்ளார். கொரோனா காலத்தில் நடிகர்கள் குண்டாகி விடுவார்களோ? என்று தான் பயந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News