சினிமா செய்திகள்

விஜய்யுடன் விரைவில் இணைவேன் - வெற்றிமாறன் அதிரடி

Published On 2023-06-26 08:13 GMT   |   Update On 2023-06-26 08:13 GMT
  • சென்னையில் நடைபெற்ற தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழாவில் வெற்றிமாறன் கலந்து கொண்டார்.
  • வெற்றிமாறன், விஜய்யுடன் இணைவது குறித்து பேசியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின்னர் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசூரன், விடுதலை உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது சூரியின் விடுதலை-2 படத்திலும் சூர்யாவின் வாடிவாசல் பட பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.




இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழாவில் வெற்றிமாறன் கலந்து கொண்டார். அப்போது விஜய்யுடன் இணைவது குறித்து வெற்றிமாறன் பேசினார். அவர் பேசியதாவது, மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் விஜய், அசூரன் பட வசனத்தை பேசியது எனக்கு சந்தோஷம். விஜய்யுடன் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன். தற்போது விஜய் இரண்டு படங்களில் பிசியாக இருக்கிறார், நானும் விடுதலை-2 மற்றும் வாடிவாசல் படங்களில் பிசியாக இருக்கிறேன். இப்படங்களின் பணிகள் முடிந்த பிறகு கண்டிப்பாக விஜய்யுடன் விரைவில் இணைவேன் என்றார்.

Tags:    

Similar News