சினிமா செய்திகள்

கள்ளச்சந்தையில் லட்சத்தில் விற்கும் டிக்கெட்டுகள்.. மும்பை 'COLD PLAY' இசை நிகழ்ச்சியை சுற்றும் சர்ச்சை

Published On 2024-10-04 06:06 GMT   |   Update On 2024-10-04 06:07 GMT
  • மும்பையில் ஜனவரி 18 மற்றும் 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மூன்று இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.
  • கள்ளச்சந்தையில் 1 டிக்கெட் ரூ.3 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது.

இசைக்கான உயரிய விருதான கிராமி விருதுகளை வென்று உலக அளவில் ரசிகர்களை கொண்ட பிரிட்டனை சேர்ந்த பிரபல ராக் [ROCK] இசைக்குழுவாக கோல்ட்ப்ளே [COLD PLAY] திகழ்கிறது. அவர்களது உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அடுத்த வருடம் [2025] ஜனவரியில் இந்தியா வருகை தர உள்ள கோல்ட்ப்ளே மும்பையில் தொடர்ச்சியாக ஜனவரி 18 மற்றும் 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மூன்று இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.

கோல்ட்ப்ளே இசைக்கு மும்பையில் அதிக ரசிகர் பட்டாளம் இருப்பதால் இந்த நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. கோல்ட்ப்ளே நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் விற்பனையை புக் மை ஷோ [BOOK MY SHOW] இணையதளம் அதிகாரபூர்வமாக விற்பனை செய்தாலும் டிமாண்ட் காரணமாக மற்ற தளங்களில் டிக்கெட்கள் விற்கப்பட்டு வருகின்றன.

டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் "லவுஞ்ச்" இருக்கைகளுக்கான டிக்கெட்டுகள் BOOK MY SHOW -ல் 1 டிக்கெட் ரூ. 35,000க்கு விற்கப்பட்டன. ஆனால் தற்போது கள்ளச்சந்தையில் இவ்வாறு சட்டவிரோதமாககள்ளச்சந்தையில் 1 டிக்கெட் ரூ.3 லட்சம் முதல் ரூ. 7.7 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது.

எனவே இவ்வாறு நடக்கும் கள்ளச்சந்தை வியாபாரம் குறித்து BOOK MY SHOW நிறுவனம் சார்பில் போலீசிலும் புகார் அளித்துள்ளது. மேலும் முறையற்ற வகையில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் BOOK MY SHOW தெரிவித்துள்ளது. ஆனால் அதிக காசு கொடுத்து வேறு தளங்களில் டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் அவை செல்லாது என அறிவிக்கப்ட்டுள்ளதால் கலக்கமடைந்துள்ளனர்.

Tags:    

Similar News