அம்பு நாடு ஒம்பது குப்பம் விமர்சனம்
சாதி வேறுபாடு உள்ள ஒரு கிராமம். அங்கு மேல் வகுப்பு மக்கள், கீழ் வகுப்பு மக்கள் உயர்ந்து விட கூடாது என்று முனைப்போடு இருக்கிறார்கள். இந்நிலையில் அந்த கிராமத்தில் திருவிழா நடக்கிறது. இதில் மேல் வகுப்பு மக்களிடையே கோவில் மரியாதை செலுத்துவதில் பிரச்சனை ஏற்படுகிறது.
இதே சமயம் கீழ் வகுப்பைச் சேர்ந்த நாயகன் பூசாரி வைத்திருக்கும் தட்டில் விபூதி எடுக்கும் நேரத்தில் தட்டு கீழே விழ, அங்கு கலவரம் வெடிக்கிறது.
இறுதியில் கலவரம் என்ன ஆனது? கோவில் திருவிழா முறையாக நடைபெற்றதா? சாதி பிரிவினை நீங்கியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் சங்ககிரி மாணிக்கம், ஹர்ஷிதாஸ்ரீ, விக்ரம், சுருதி, பிரபு மாணிக்கம் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். அனைவரும் புது முகங்கள் என்பதால் நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜாஜி. ஆனால் திரைக்கதையில் தெளிவு இல்லாததால் பெரியதாக படம் ஒர்க்கவுட் ஆகவில்லை. காட்சிகள் ஒவ்வொன்றும் தொடர்ச்சி இல்லாமல் பயணிக்கிறது. சொல்ல வந்த கருத்து நியாயம் என்றாலும், எடுத்த விதம் நியாயம் இல்லாமல் இருக்கிறது.
ஓ.மகேஷ் ஒளிப்பதிவில் கவனம் செலுத்தி இருக்கலாம். ஆண்டணி தாசின் இசையில் பாடல்கள் ஓகே. ஜேம்ஸ் வசந்தனின் பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு செட் ஆகவில்லை.