டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: விராட் கோலி சாதனையை முறியடித்த பாபர் அசாம்
- அமெரிக்காவுக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் பாபர் அசாம் 44 ரன்கள் எடுத்தார்.
- சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி பெற்றது.
டல்லாஸ்:
டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான், அமெரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாபர் அசாம் 44 ரன்னும், ஷதாப் கான் 40 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து ஆடிய அமெரிக்கா 20 ஓவரில் 159 ரன்கள் எடுக்க, ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது. சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் பாபர் அசாம் 44 ரன்களை எடுத்து, டி20 கிரிக்கெட்டில் இதுவரை 4,067 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை தகர்த்து, புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் 4,067 ரன்களுடன் பாபர் அசாமும், 2-வது இடத்தில் 4,038 ரன்களுடன் விராட் கோலியும், 3-வது இடத்தில் 4,026 ரன்களுடன் ரோகித் சர்மாவும் உள்ளனர்.