கிரிக்கெட் (Cricket)

அமெரிக்கா கிரிக்கெட் லீக் - டெக்சாஸ் அணியை வாங்கிய சி.எஸ்.கே. நிர்வாகம்

Published On 2023-04-23 18:56 IST   |   Update On 2023-04-23 18:56:00 IST
  • சிஎஸ்கே அணி நிர்வாகம் டெக்சாஸ் அணியை வாங்கியுள்ளது.
  • டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் லோகோவை சி.எஸ்.கே. நிர்வாகம் இன்று வெளியிட்டது.

புதுடெல்லி:

ஐ.பி.எல். போலவே அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடர் தொடங்கப்பட உள்ளது. வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ள நிலையில், இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டெக்சாஸ் அணியை வாங்கியுள்ளது.

இந்நிலையில், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் லோகோவை சென்னை அணி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நியூயார்க் அணியையும், டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிர்வாகம் சியாட்டில் அணியையும் வாங்கியுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் லாஞ் ஏஞ்சல்ஸ் அணியை வாங்கியிருந்தது.

Tags:    

Similar News