கிரிக்கெட்

விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ரியான் பராக்: காரணம் தெரியுமா?

Published On 2024-07-03 10:36 GMT   |   Update On 2024-07-03 10:36 GMT
  • இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜூலை 6-ம் தேதி தொடங்குகிறது.
  • இந்திய அணி மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து ஜிம்பாப்வே புறப்பட்டுச் சென்றது.

மும்பை:

இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க ஜிம்பாப்வே செல்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜூலை 6-ம் தேதி தொடங்குகிறது.

இதற்கிடையே, ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய இளம் அணி, மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து ஜிம்பாப்வேயில் இருக்கும் ஹராரே நகருக்கு புறப்பட்டுச் சென்றது.

அப்போது, மும்பை விமான நிலையத்தில் பாஸ்போர்ட் செக்கிங் செய்யும்போது, எனது பாஸ்போர்ட்டை காணவில்லை என இந்திய வீரர் ரியான் பராக் கூறியுள்ளார். அவரது பையில் நடத்தப்பட்ட சோதனையில் பாஸ்போர்ட் கிடைத்ததால் பராக் ஹராரேவுக்கு பறந்தார்.

இதுதொடர்பாக, பி.சி.சி.ஐ. இணையதளத்திற்கு பேட்டி அளித்த பராக், மும்பை விமான நிலையத்தில் பாஸ்போர்ட் செக்கிங்கில் எனது பாஸ்போர்ட்டை காணவில்லை. நல்லவேளை, அதே பையில் தான் இருந்திருக்கிறது. இது கவனக்குறைவு கிடையாது. இந்திய அணியில் அறிமுகம் ஆவதற்காக ஆர்வமாக உள்ளேன். இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட செய்தி அறிந்தபின் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சியில் எனது பாஸ்போர்ட், செல்போன் உள்ளிட்ட பொருட்களை எங்கு வைத்தேன் என்பதையே மறந்து விட்டேன். இந்திய அணிக்கு ஆடப்போகிறோம் என்ற ஆர்வத்தில் இந்த தவறு நடந்தது என தெரிவித்தார்.

Tags:    

Similar News