ஆன்மிக களஞ்சியம்

திருக்கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலயம்

Published On 2024-11-28 11:55 GMT   |   Update On 2024-11-28 11:55 GMT
  • தேவாரம், பெரிய புராணம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 36 வது ஸ்தலமாகும்.
  • இந்த கோவில் மதுரை ஆதீனத்திற்கு உட்பட்டதாக திகழ்கிறது. இது நவக்கிரக ஸ்தலங்களில் சுக்கிரனுடைய ஸ்தலமாக போற்றப்படுகிறது.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரிக்கு வடக்கே கும்ப கோணத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவில்.

தேவாரம், பெரிய புராணம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 36 வது ஸ்தலமாகும்.

இந்த கோவில் மதுரை ஆதீனத்திற்கு உட்பட்டதாக திகழ்கிறது. இது நவக்கிரக ஸ்தலங்களில் சுக்கிரனுடைய ஸ்தலமாக போற்றப்படுகிறது.

மூலவராக அக்னீஸ்வர ரும், தாயாராக கற்பகாம் பிகையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். தல விருட்சமாக புரச மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தமும் உள்ளது.

சிவபெருமான் பராசர முனிவருக்கு முக்தி தாண் டவம் ஆடி நீங்கியருளியத் தலம் பிரம்மனுக்கு திருமண காட்சி தந்தத் தலம் , அக்னிக்கு உண்டான சோகை நோயை தீர்த்த தலம், சந்திரனின் சாபம் நீங்கியத் தலமாகவும் உள்ளது.

அது மட்டுமின்றி கம்சன் என்னும் மன்னனின் உடற்பிணி நீக்கிய தலம், கலிக்காமருக்கு திருமணம் நடந்தத் தலம், மானக்கஞ்சாரர் அவதரித்து வழிபட்டத் தலம்.

மேலும் பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்தர் அவதார தலம், வடக்கு நோக்கி ஓடும் காவிரிக் கரையில் அமைந்த தலம் என பல புராண வரலாறுகளை தன்னகத்தே கொண்டது.

இத்தலம் நம்மை நாளும் ஆளும் நவக் கிரகங்களில் ஒன்றான சுக்ரனுக்குரிய பரிகாரத் தலமாகவும், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற திருக்கஞ்சனூரில் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள தல மூலவரான அக்னீஸ்வர சுவாமி கிழக்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக உயர்ந்த பாணத்துடன் சுக்ர பகவானாக லிங்க வடிவத் தில் அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம்.

பிரம்ம தேவருக்கு திரு மணக்கோலம் காட்டி அருளியதால், இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் தனி சன்னதியில் அன்னை கற்ப காம்பாள் காட்சி அளிக்கிறார்.

Similar News