ஆன்மிக களஞ்சியம்

அன்னை துர்க்காவிற்கான ஏகமுக தீபம்

Published On 2024-11-22 12:00 GMT   |   Update On 2024-11-22 12:00 GMT
  • வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் தீப விளக்கிற்கு மலர்மாலை சாற்றி பூஜிக்க, சகல நன்மைகள் பெறலாம்.
  • ஏகமுக தீபத்தை, “பகவதி தீபம்” என்றும், “ஸ்ரீதுர்கா தீபம்” என்றும் ஆதிகாலம் முதல் கூறி வருகிறார்கள்.

தீப அலங்காரம்!

வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் தீப விளக்கிற்கு மலர்மாலை சாற்றி பூஜிக்க, சகல நன்மைகள் பெறலாம்.

வீட்டில் விளக்கேற்றி வரும் இடம் ஒரே இடமாக இருப்பது நல்லது.

அடிக்கடி இடத்தை மாற்றக்கூடாது.

காலை, மாலை விளக்கேற்றும் போது கல்கண்டை நிவேதனமாகப் படைத்து குழந்தைகளுக்கு கொடுக்க சகல நன்மைகளும் உண்டாகும்.

ஏகமுக தீபம்!

ஏகமுக தீபத்தை, "பகவதி தீபம்" என்றும், "ஸ்ரீதுர்கா தீபம்" என்றும் ஆதிகாலம் முதல் கூறி வருகிறார்கள்.

சர்வசக்திகளும் தன்னுள் இருக்க, தான் ஒருத்தியே ஏகமாக பிரகாசிப்பதை ஏகமுக தீபம் குறிக்கிறது.

எனவே தான் லலிதா சகஸ்ரநாம பூஜைக்கு ஐந்துமுக தீபமும், துர்கா பூஜைக்கு ஏகமுக தீபமும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஏகமுக தீபத்தில் "ஸ்ரீதுர்க்கா" தேவியை ஆவாகணம் செய்து சகஸ்ரநாமத்தால் அர்ச்சனை செய்வது வழக்கமாக உள்ளது.

இந்த தீப வழிபாட்டால் சிறந்த பலன்களை பெறலாம்.

Similar News