தமிழ்நாடு

அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள்- கொடைக்கானல் நுழைவாயிலில் கட்டாய கொரோனா பரிசோதனை

Published On 2023-04-24 04:43 GMT   |   Update On 2023-04-24 05:34 GMT
  • மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது கோடை மழை பெய்து இதமான சீதோசனம் நிலவி வருகிறது.
  • வெளிநாட்டவரும் கோடைகாலத்தை கொண்டாடும் விதமாக கொடைக்கானலுக்கு வருகின்றனர்.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது கோடை மழை பெய்து இதமான சீதோசனம் நிலவி வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இங்குள்ள பெரும்பாலான நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அடர்ந்த வனப்பகுதியில் எங்கும் பச்சைபசேல் என காணப்படும் புல்வெளிகளும் கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது. வெளிநாட்டவரும் கோடைகாலத்தை கொண்டாடும் விதமாக கொடைக்கானலுக்கு வருகின்றனர்.

இதனால் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று ஓய்ந்த நிலையில் கடந்த சில நாட்களாக நாடுமுழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது வரை 73 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளியூர்களில் இருந்து கொடைக்கானலுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கொடைக்கானல் நகர் நுழைவுவாயில் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி அருகே சுழற்சி முறையில் பயணிகளிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் சுற்றுலா பயணிகள் 2 தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி உள்ளனரா? என சுகாதாரத்துறையினர் சோதனை செய்கின்றனர். பொது இடங்கள், சுற்றுலா தலங்களில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதால் முககவசம் அணிய வேண்டும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News