ஆன்மிகம்

செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர ஹோம சிறப்பு பூஜை

Published On 2016-06-02 03:07 GMT   |   Update On 2016-06-02 03:07 GMT
செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர ஹோம சிறப்பு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
ஆலத்தூர் ஒன்றியம் செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் தனி சன்னதி கொண்டு செல்வம் மற்றும் புகழை வாரி வழங்கும் சித்ரலேகா உடனுறை குபேர பெருமானின் ஜென்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று ஒவ்வொரு மாதமும் குபேர ஹோமமும், சிறப்பு வழிபாடும் நடைபெற்று வருகிறது.

அதன்படி, செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள குபேரன் சன்னதியில் நேற்று முன்தினம் குபேர ஹோமமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. குபேர ஹோம சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டால் கடன் தீர்ந்து செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.

வீடு, வாகனம், கூடும் என்பதும், மூன்று முறை குபேர ஹோம வழிபாட்டில் கலந்து கொண்டால் வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. அதனால் குபேர ஹோம சிறப்பு பூஜைகளால் செட்டிகுளம், மாவலிங்கை, நாட்டார்மங்கலம், கூத்தனூர், பாடாலூர், இரூர், ஆலத்தூர்கேட் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Similar News