ஆன்மிகம்
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் தேரோட்டம்

Published On 2017-10-14 04:23 GMT   |   Update On 2017-10-14 04:23 GMT
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி விசு திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், வீதி உலா நடந்து வருகிறது. விழாவின் 5-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் காலை 8.30 மணிக்கு விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அதன்பிறகு முருகன் தேரும், தொடர்ந்து குற்றாலநாத சுவாமி தேர், குழல்வாய்மொழியம்மை தேர் ஆகியனவும் வடம் பிடித்து இழுக்கப்பட்டன. காலை 11 மணிக்கு தேரோட்டம் நிறைவு பெற்றது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும் நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 16-ம் தேதி சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது.

18-ம் தேதி காலை 9 மணிக்கு விசு தீர்த்தவாரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர்கள் சாத்தையா, செல்வ குமாரி ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Similar News