ஆன்மிக களஞ்சியம்

சக்தி வாய்ந்த சகலகலா வல்லி மாலை

Published On 2024-10-10 11:45 GMT   |   Update On 2024-10-10 11:45 GMT
  • பிறமதவாதிகளுடன் வாதிட்டு வெல்வதற்காக குருபரர் தமிழ்நாட்டிலும், அதன்பிறகு பாரதநாட்டின் இதர பகுதிகளிலும் திக்குவிஜயம் செய்தார்.
  • அப்போது காசிக்கும் சென்றார். சைவர்களின் முக்கிய தலமாகிய காசியில் தமிழர்களுக்கு என்று ஒன்றுமே இல்லையே என்ற ஆதங்கம் அவருக்கு ஏற்பட்டது.

கலைமகளின் துதிகள் ஏராளமாகத் தமிழ் இலக்கியத்தில் காணப்படுகின்றன.

கம்பனின் சரஸ்வதி அந்தாதியும், ஒட்டக்கூத்தரின் ஈட்டி எழுபதும் குமரகுருபரின் சகல கலா வல்லி மாலையும் மிகவும் ஆற்றல் வாய்ந்த துதிமாலைகள்.

நாமகளின் பேரருளுக்கு பெரிதும் பாத்திரமானவர் குமரகுருபரர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த குமரகுருபரர் பிறந்ததிலிருந்து பேசாமலேயே இருந்தவர் அவர்.

சிறு வயதில் அவருடைய பெற்றோர் அவரை திருச்செந்தூர் முருகனின் சன்னிதானத்தில் விட்டுவிட்டு சென்றனர். முருகனின் திருவருளால் அவர் கவிமாரியாக பொழிந்தார்.

முதற்பாட்டு முருகனின் போல் பாடிய கந்தர் கலிவெண்பா. அன்றிலிருந்து தான் அவருக்கு குமரகுருபரன் என்னும் பெயர் நன்கு விளங்கலாயிற்று.

திருச்செந்தூரிலிருந்து மதுரைக்கு வந்தார். அங்கு அவர் மீனாட்சியின் சன்னதியில் மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ் பாடினார்.

அதை மன்னர் திருமலை நாயக்கன் மடிமீது சிறு குழந்தை வடிவிலிருந்து அங்கயற்கண்ணி கேட்டுக்கொண்டிருந்தாள்.

அதில் தொடுக்கும் பழம்பாடல் தொடையின் பயனே என்னும் பாடலின் பொது திருமலை நாயக்கரின் கழுத்தில் கிடந்த முத்துமாலையை கழற்றி, மீனாட்சி, குருபரனின் கழுத்தில் சூட்டினாள்.

பிறமதவாதிகளுடன் வாதிட்டு வெல்வதற்காக குருபரர் தமிழ்நாட்டிலும், அதன்பிறகு பாரதநாட்டின் இதர பகுதிகளிலும் திக்குவிஜயம் செய்தார்.

அப்போது காசிக்கும் சென்றார். சைவர்களின் முக்கிய தலமாகிய காசியில் தமிழர்களுக்கு என்று ஒன்றுமே இல்லையே என்ற ஆதங்கம் அவருக்கு ஏற்பட்டது.

ஆகவே காசியில் ஒரு மடத்தை தோற்றுவிக்க நிச்சயித்தார்.

அவ்வமயம் இந்துஸ்தானத்தின் பேரரசராக ஷாஜகான் இருந்தார்.

அவருடைய பிரதிநிதியாக அவருடைய மூத்த மகனாகிய தாரா ஷிக்கோ நவாப் பதவியில் அவுத் என்னும் ஊரில் இருந்து வந்தார்.

அவரை காண சென்றார் குருபரர்.

சித்தராகிய குருபரர் போகும் போதே சிங்கமொன்றின் மீது சவாரி செய்து சென்றார். நவாபு இந்துஸ்தானி மொழியில் பேசினார். ஆனால் அம்மொழி குருபரருக்கு தெரியாது.

ஆகவே சரஸ்வதியை தியானித்து சகல கலாவல்லி மாலை எனும் பாடலை பாடினார். நாமகளுடைய அருளால் குருபரருக்கு இந்துஸ்தானியில் பேசும் ஆற்றல் ஏற்பட்டது.

நவாபிடம் இந்துஸ்தானியில் சரளமாக உரையாடி தம் வேண்டுகோளை சமர்ப்பித்தார். மனமகிழ்வுற்ற நவாபு காசியில் மடம் கட்டிக்கொள்ள இனாமாக நிலம் வழங்கினார்.

அன்றிலிருந்து குமரகுருபரன் மடத்தை காசி மடம் என்றும், அவருடைய வழியில் வந்த மடாதிபதிகளை காசி வாசி என்றும் அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

ஆகவே, சரஸ்வதி படத்தை வைத்துக்கொண்டு அதன் அருகே விளக்கேற்றி வைத்து முன்னால் ஒரு வெண்ணிற துணியை விரித்து, அதன் மீது புத்தகங்கள், எழுது கருவிகள், தொழிலுக்குரிய சாதனங்கள் ஆகியவற்றை வைத்து சகல கலா வல்லி மாலையை படித்துப் பூஜை செய்யலாம்.

Similar News