ஆன்மிக களஞ்சியம்

லட்சுமி அருள்பாலிக்கும் தலங்கள்-திருப்பதி திருமலை மற்றும் ஸ்ரீரங்கம்

Published On 2024-10-09 11:01 GMT   |   Update On 2024-10-09 11:01 GMT
  • திருப்பதி திருமலையில் ஸ்ரீ விக்னேஸ்வரரின் ஆலயம் ஒன்றுள்ளது.
  • ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டப வீதி புது அக்ரஹாரத்தில் அஷ்ட லட்சுமி மண்டபம் என்றே ஒரு மண்டபம் உள்ளது.

திருப்பதி திருமலையில் ஸ்ரீ விக்னேஸ்வரரின் ஆலயம் ஒன்றுள்ளது.

அதில் அஷ்டலட்சுமிகளான, ஸ்ரீ ஆதிலட்சுமி, ஸ்ரீ வீரலட்சுமி, ஸ்ரீ கஜலட்சுமி, ஸ்ரீ தான்யலட்சுமி, ஸ்ரீ விஜய் லட்சுமி, ஸ்ரீ தீப லட்சுமி, ஸ்ரீ தனலட்சுமி, ஸ்ரீ ஐஸ்வரியலட்சுமி எனும் திருநாமங்களோடு அர்ச்சாவதார மூர்த்திகளாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள்.

இம்மூர்த்தங்களை ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்து வைத்தார்.

ஸ்ரீரங்கம்

ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டப வீதி புது அக்ரஹாரத்தில் அஷ்ட லட்சுமி மண்டபம் என்றே ஒரு மண்டபம் உள்ளது.

அதில் நுழைவுப் பகுதி முன் வாயிலுக்கு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி வாசல் என்பது பெயராகும்.

அம்மண்டபத்தினுள் எண் திசைகளுக்கும் ஒவ்வொன்றாக எட்டு லட்சுமி மூர்த்தங்கள் உள்ளன.

ஒவ்வொன்றிற்கும் இரண்டிரண்டு திருநாமங்களும் உள்ளன.

அவை முறையே

1. ஸ்ரீ வித்யலட்சுமி - யசோலட்சுமி, 2. ஸ்ரீ தனலட்சுமி - கஜலட்சுமி, 3. ஸ்ரீ சந்தானலட்சுமி - தான்யலட்சுமி, 4. ஸ்ரீ தைரிய லட்சுமி - சித்தலட்சுமி, 5. ஸ்ரீ சாம்ராஜ்யலட்சுமி - மோட்ச லட்சுமி, 6. ஸ்ரீ சவுர்யலட்சுமி - வீர லட்சுமி, 7. ஸ்ரீ லட்சுமி - ஜயலட்சுமி, 8. ஸ்ரீ பிரசன்னலட்சுமி - சவுபாக்ய லட்சுமி எனும் திருநாமங்களாகும்.

Similar News