ஆன்மிகம்
100 மூட்டை பச்சரிசி சாதம் படைத்து பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் 100 மூட்டை பச்சரிசி சாதம் படைத்து சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த, உலக புராதன சின்னங்களில் ஒன்றான பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ராஜேந்திர சோழனால் கலை நயத்துடனும் மிக பிரம்மாண்டமாகவும் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வியந்து பார்த்து செல்கின்றனர். கோவிலில் சிங்கமுக கிணறு, ஒரே கல்லில் ஆன நவக்கிரகம் பிரசித்தி பெற்றது.
இக்கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் சுற்றளவு 62 அடி, உயரம் 13½ அடி ஆகும். இந்த சிவலிங்கம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்ற சிறப்பும் உண்டு. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். காஞ்சி சங்கரமட நிர்வாகிகள் கடந்த 32 ஆண்டுகளாக இந்த பணியை செய்து வருகின்றனர்.
சமைக்கப்பட்ட சாதம் குவித்து வைக்கப்பட்டு இருந்த காட்சி.
அதன்படி நேற்று 33-வது ஆண்டாக இக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, 100 மூட்டைகளில் இருந்த 2,500 கிலோ எடை பச்சரிசியை நீராவி அடுப்புகளில் சமைக்கப்பட்டது. இந்த பணி காலையில் தொடங்கி மாலை வரை நடந்தது.
இதில் சமைக்கப்பட்ட சாதத்தை நூற்றுக்கணக்கான சிவாச்சாரியார்கள் மூங்கில் கூடைகளில் சுமந்து சென்று சிவலிங்கத்தின் மீது சாத்தி அன்னாபிஷேகம் செய்தனர். பின்னர் சிவலிங்கத்தின் மீது காய்கறிகள், பழங்கள், பலகாரங்களால் அலகரிக்கப்பட்டு, பிரம்மாண்ட பூமாலையும் அணிவிக்கப்பட்டது.
நீராவி அடுப்புகளில் சாதம் சமைத்த போது எடுத்த படம்.
இதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிவலிங்கத்தை தரிசனம் செய்தனர். வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர். பின்னர் இரவு 9 மணிக்கு சிவலிங்கத்தின் மீது சாத்தப்பட்ட சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த சாதத்தை சாப்பிடுவதால் நோய்கள் குணமாகும் என்றும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம். பக்தர்களுக்கு வழங்கியது போக மீதம் உள்ள சாதம் அருகில் உள்ள குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா, உதவி ஆணையர் செந்தில்குமார், செயல் அலுவலர் பரிமாணம், உடையார் பாளையம் கோட்டாட்சியர் டினா குமாரி, ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறையும், காஞ்சி சங்கரமட நிர்வாகிகள் மற்றும் அன்னாபிஷேக கமிட்டியினர் செய்து இருந்தனர்.