ஆன்மிகம்

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை

Published On 2019-03-29 03:32 GMT   |   Update On 2019-03-29 03:32 GMT
தேய்பிறை அஷ்டமியையொட்டி தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்புவில் புகழ்பெற்ற சவுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பரிவார மூர்த்தியாக எழுந்தருளியுள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களால் வழங்கப்பட்ட செவ்வரளி பூக்களால் மலர் அபிஷேகம் நடத்தப்பட்டது.

இதையடுத்து சொர்ண ஆகர்ஷண பைரவர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேனியை சேர்ந்த ஹரே ராமா ஹரே கிருஷ்ணா குழுவினரால் ராமநாம கீர்த்தனைகள் பாடப்பட்டன. பூஜையில் திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வழிபட்டனர்.
Tags:    

Similar News