திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- தினமும் உகப்படிப்பு, அன்னதர்மம் வழங்குதல் நடக்கிறது.
- தேரோட்டம் 31-ந்தேதி நடக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவில் கடற் கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக கொடி பட்டம் பதியைச்சுற்றி வந்து பதியை வந்தடைந்தது. பின்னர் கொடி மரத்தில் கொடியை வள்ளியூர் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் கொடியேற்றினார். கொடி யேற்றத்தை தொடர்ந்து காலை 7 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாக னத்தில் பவனி, 9 மணிக்கு அன்னதர்மம், 12 மணிக்கு உச்சிபடிப்பு, பணிவி டையம் நடைபெற்றது
பகல் 1 மணிக்கு அன்ன தர்மம், மாலை 4 மணிக்கு உகப்படிப்பு பணிவிடை 5 மணிக்கு புஷ்ப வாகன பவனி, 6 மணிக்கு அன்னதர்மம் இனிமம் வழங்குதல் நடக்கிறது. 11 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் உகப்படிப்பு, பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பு பணிவிடை, அன்னதர்மம், வழங்குதல் நடக்கிறது.
இதே போல் விழாவில் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், மயில், அன்னம், சர்ப்பம், கருட வாகனம், குதிரை, ஆஞ்சநேயர்,இந்திரன் என பல்வேறு வாகனங்களில் பவனி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 31-ந்தேதி பகல் 12.05 மணிக்கு நடக்கிறது.
தேரோட்டத்தை தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பரா மரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் களக்காடு சுந்தர பாகவதர் குமார் ஜெய ராமன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். அன்று இரவு 1மணிக்கு காளை வாகன பவனியும் நடக்கிறது.