கோனியம்மன் கோவிலில் ஆடி மாதம் முழுவதும் நடக்கும் ஊஞ்சல் உற்சவம்
- காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றி பெண்கள் வழிபடுவர்.
- இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.
அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி மாதம். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறும். இதேபோல கோனியம்மன் கோவிலிலும் ஆடி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்கிறது. அந்த நாட்களில் வழக்கத்தை விட பெண்கள் ஏராளமானோர் வந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள்.
மேலும் ஒரு விசேஷம் என்னவென்றால் இந்த ஆடி மாதம் முழுவதும் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். காலை வேளையில் உற்சவ அம்மனை சிறப்பு அலங்காரத்தில் சன்னதி முன்புள்ள மகா மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்வார்கள். அங்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.
காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றி பெண்கள் வழிபடுவர். இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து உற்சவ அம்மன் சன்னதிக்குள் எழுந்தருளுவார். மறுநாள் காலை மீண்டும் மகா மண்டபத்துக்கு வருவார். இப்படி அந்த ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது விசேஷமானது ஆகும். ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு கூழ்படைத்து வழிபடுவது வழக்கம். இந்த கோவிலில் நேர்ச்சை கடன் செலுத்தும் பக்தர்கள் ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் படைத்து வழிபடுவர்.
இதேபோல நவராத்திரி விழாவையொட்டி 9 நாட்களும் அம்மனுக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படும்.