வழிபாடு

பரமக்குடியில் புனித அலங்கார அன்னை ஆலய கொடியேற்றம்

Published On 2022-08-20 05:04 GMT   |   Update On 2022-08-20 05:04 GMT
  • அலங்கார மாதாவின் திருஉருவ பவனி ஆலயத்தை சுற்றி வலம் வந்தது.
  • பரமக்குடி புனித அலங்கார அன்னை ஆலய பெருவிழாவின் தேர் பவனி 27-ந்தேதி நடக்கிறது.

பரமக்குடி புனித அலங்கார அன்னை ஆலய பெருவிழாவின் தேர் பவனி 27-ந் தேதி நடக்கிறது. அதையொட்டி விழாவின் கொடியேற்று விழா நடந்தது. இதற்கு வட்டார அதிபரும் பங்கு பணியாளருமான திரவியம் முன்னிலையில் மதுரை ஜெபமாலை அன்னை ஆலயம் வட்டார அனைத்து பங்கு பணியாளர் ஆனந்தம் கொடியை அர்ச்சித்து ஏற்றி வைத்தார்.

இதில் உதவி பங்கு பணியாளர் பிரான்சிஸ் பிரசாந்த், பிரிட்டோ ஜெயபால் மற்றும் இறை மக்கள் கலந்துகொண்டு அருள் பெற்றனர். அலங்கார மாதாவின் திருஉருவ பவனி ஆலயத்தை சுற்றி வலம் வந்தது. பின்னர் திருப்பலி நிறைவேற்றினர். விழா ஏற்பாடுகளை பங்கு பேரவையினர், பொறுப்பாளர்கள், பணி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News