வழிபாடு

ஆமலகி ஏகாதசி: திருமாலின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்

Published On 2024-02-20 02:30 GMT   |   Update On 2024-02-20 02:30 GMT
  • ஆமலகி ஏகாதசி செல்வ வளத்தையும், வெற்றிகளையும் தரக்கூடியது.
  • பகவான் ஸ்ரீமன் நாராயணனை துதிக்க வேண்டும்.

மாசி மாதத்தில் வளர்பிறை, தேய்பிறை இரண்டிலுமே வரும் ஏகாதசி தனித்துவமானவை. இந்த ஏகாதசிகளில் விரதமிருந்தால் திருமாலின் அருள் பரிபூரணமாகக்கிடைக்கும். வாழும் போதே துன்பங்கள் இன்றி, இன்பமான வாழ்க்கை வாழ வழிசெய்யும். மாசி மாதம் வளர்பிறையில் வரும் ஆமலகி ஏகாதசி செல்வ வளத்தையும், வெற்றிகளையும் தரக்கூடியது.

இந்த ஏகாதசியில் விரதம் இருந்து, நெல்லி மரத்திற்கு பூஜை செய்து வழிபட்டால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். இதனால், வீட்டில் உள்ள பணம் தொடர்பான பிரச்னைகள் நீங்கி, செல்வச் செழிப்பு ஏற்படும். ஏகாதசி உபவாசம் இருந்து பகவான் ஸ்ரீமன் நாராயணனை துதிக்க வேண்டும். அன்று இந்த பாசுரம் பாடலாம்.

``சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்

சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து

ஆர்வினவிலும் வாய் திறவாதே

அந்தகாலம் அடைவதன்முன்னம்

மார்வம்என்பதுஓர் கோயில்அமைத்து

மாதவன்என்னும் தெய்வத்தைநாட்டி

ஆர்வம்என்பதுஓர் பூஇடவல்லார்க்கு

அரவதண்டத்தில் உய்யலும்ஆமே''.

Tags:    

Similar News