- மதிப்புமிக்க முத்து மாலையை அவருக்கு பரிசளித்தார்.
- ஒவ்வொரு முத்தாக எடுத்து கடித்து உடைத்து தூக்கி வீசினார்.
`ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தந்நோ, ஹனுமன் ப்ரசோதயாத்'
இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி, அதோடு ராம நாமத்தையும் பாராயணம் செய்து வந்தால், அனுமனிடம் இருந்து கேட்ட வரங்கள் கிடைக்கும்.
வடை மாலை ஏன்?
ராவணனை வதம் செய்து அயோத்தி திரும்பிய பின்னர், ராமருக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. அதில் அனைவரும் பங்கேற்றிருந்தனர். அனுமனும் கலந்துகொண்டார். அந்த சபையில், அனுமனுக்கு ஒரு உயர்ந்த பரிசை அளிக்க விரும்பிய சீதாதேவி, தன்னுடைய கழுத்தில் இருந்து ஒரு மதிப்புமிக்க முத்து மாலையை அவருக்கு பரிசளித்தார். அதை வாங்கிய அனுமன், அந்த மாலையில் இருந்து ஒவ்வொரு முத்தாக எடுத்து கடித்து உடைத்து தூக்கி வீசினார்.
இதைப்பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அனுமனின் செய்கையைப் பற்றி சீதாதேவியே அவரிடம் கேட்கவும் செய்தார். அதற்கு அனுமன், "தாயே.. தாங்கள் பரிசளித்த முத்து மாலையில் இருந்த ஒரு முத்தில் கூட ராம ரசம் இல்லை. ராம ரசம் இல்லாத எந்த பொருளும் எனக்கு உயர்வானது அல்ல" என்றார். சீதாதேவி மட்டுமல்ல அங்கிருந்த அனைவருமே அனுமனின் பக்தியை நினைத்து பூரித்துப் போயினர்.
அந்த அனுமனுக்கு, ராம நாமத்தைச் சொல்லிய படியே வடையை கைகளால் தட்டி, சுட்டு, பின் மாலையாக கோர்த்து அணிவிக்க வேண்டும். அதை கடித்துப் பார்க்கும் அனுமன், அதில் ராம ரசம் இருப்பின், அதை அணிவித்த பக்தர்களுக்கு வேண்டிய வரங்களைத் தருவார் என்பது நம்பிக்கை.
சிரஞ்சீவி பட்டம் பெற்றவர்களில் முக்கியமானவர், ஆஞ்சநேயர். இவர், ராமாயண இதிகாசத்தில் தலைவனாக வைத்து போற்றப்படும் ராமரின், முதன்மை பக்தனாகவும், அவரது தூதுவனாகவும் இருந்து பேறுபெற்றவர். ராம நாமத்தைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக விண்ணுலக வாழ்வை மறுத்து, இந்த பூமியிலேயே தங்கியவர் என்ற பெருமைக்குரியவர்.
இத்தகைய சிறப்பு கொண்ட ஆஞ்சநேயருக்கு, மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் அன்று ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவரது சிறப்புகளைப் பற்றி அறிந்துகொள்வோம்.
கேசாரி என்ற மன்னன், அஞ்சனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பல காலமாக குழந்தைப் பேறு கிடைக்காமல் இருந்தது. இதனால் அஞ்சனா, தனக்கு குழந்தைப் பேறு கிடைக்க வேண்டும் என்பதற்காக சிவபெருமானை நோக்கி கடுமையாக தவம் செய்தார். இவர் தவம் செய்த இடம் `அஞ்சனாத்ரி மலை' என்று அழைக்கப்படுகிறது. கர்நாடக மாநிலம் ஹம்பியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
ஒரு முறை திருக்கயிலாயத்தில் சிவபெருமானும், பார்வதியும், குரங்கு உருவத்தில் விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது அவர்கள் இருவரின் உடலில் இருந்தும் ஜோதி வெளிப்பட்டு ஒரே ஜோதியாகி நின்றது. அதனை வாயு பகவான் கொண்டு வந்து, தவம் செய்து கொண்டிருந்த அஞ்சனாவிடம் பிரசாதமாக கொடுத்தார். அதன்மூலம் பிறந்தவர்தான், 'ஆஞ்சநேயர்'. சிவனின் ஜோதியில் இருந்து பிறந்தவா் என்பதால், 'ருத்ர வீரிய சமுத் பவாய நமக' என்ற நாமம் அவருக்கு உண்டானது. இப்படி ஆஞ்சநேயர் அவதரித்தது, மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. எனவே அந்த நாளில், 'அனுமன் ஜெயந்தி' கொண்டாடப்படுகிறது.
சிவபெருமான் சக்தியில் இருந்து தோன்றியவர் என்பதால், ஆஞ்சநேயருக்கு இயல்பாகமாக அதீத சக்தி இருந்தது. அவர் குழந்தையாக இருந்த சமயத்தில், கிரகண காலம் ஒன்று வந்தது. அப்போது ராகு பகவான், சூாியனை பிடிப்பதற்காக சென்று கொண்டிருந்தார். ராகு, சூரியனை நெருங்க நெருங்க சூரியனின் செம்மை நிறம் கூடியது. பூமியில் குழந்தையாக இருந்த ஆஞ்சநேயருக்கு, சூரியன் ஒரு பழம் என்று தோன்றியது. எனவே அதைப் பறித்து சாப்பிடும் நோக்கில், ஆஞ்சநேயர் வானில் எகிறி பறக்கத் தொடங்கினார்.
சிறிய குரங்கு ஒன்று சூரியனை நோக்கி வருவதைப் பார்த்த ராகு, அதை தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால் குழந்தையான ஆஞ்சநேயரோ, ராகுவை தன் காலால் தள்ளிவிட்டு, சூரியனை நோக்கி முன்னேறினார். இதனால் `கிரகணம் நடை பெறாமல் போய்விடுமோ' என்று அஞ்சிய ராகு, தேவர்களின் தலைவனான இந்திரனிடம் இதுபற்றி முறையிட்டார்.
உடனே அங்கு வந்த தேவேந்திரன், "அஞ்சனை மைந்தனே.. இது பழம் அல்ல; சூரியன். அதனை உன்னால் சாப்பிட இயலாது. உனக்கு வேறு பழம் தருகிறேன்" என்று எவ்வளவோ சொல்லியும் ஆஞ்சநேயர் கேட்கவில்லை. சிறு குழந்தை என்பதால் அடம் பிடித்தார்.
செய்வதறியாது திகைத்த தேவேந்திரன் ஒரு கட்டத்தில் கோபம் கொண்டு, தன்னுடைய ஆயுதமான வஜ்ஜிராயுதத்தால், ஆஞ்சநேயரின் தாடையில் தாக்கினார். இதனால் ஆஞ்சநேயர் பூமியில் போய் விழுந்தார். இந்திரன் தாக்கியதில் ஆஞ்சநேயரின் தாடை வீக்கம் கொண்டது. வடமொழியில் தாடைக்கு 'ஹனு' என்று பெயர். எனவே அவர் 'அனுமன்' என்று பெயர் பெற்றார்.
சிவபெருமானின் சக்தியை அஞ்சனாதேவியிடம் கொண்டு போய் சேர்த்தவர், வாயு பகவான். அதனால் அனுமனுக்கு 'வாயுபுத்திரர்' என்ற பெயரும் உண்டு. அனுமன் பிறப்பெடுக்க காரணமாக இருந்த வாயு பகவானுக்கு, ஆஞ்சநேயர் தாக்கப்பட்டது வருத்தத்தை அளித்தது.
எனவே அவர் தன்னுடைய காற்றை அடக்கிக்கொண்டு ஒரு குகைக்குள் போய் இருந்து கொண்டார். இதனால் பிரபஞ்சத்தில் எங்குமே காற்று இல்லாமல் அனைத்து ஜீவராசிகளும் துன்பத்தில் துடித்தன.
இதனால் பதற்றம் அடைந்த தேவேந்திரன், உடனடியாக வாயுவிடம் சென்று, "வாயுவே.. ஏன் இப்படி செய்கிறீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு வாயு பகவான், "ஆஞ்சநேயனை.. நீங்கள் தாக்கியது என்னை வேதனைப்படுத்திவிட்டது. எனவே அவனுக்கு அதிக சக்திகள் கொடுத்து பாதுகாக்க வேண்டும்" என்று வேண்டினார். இதையடுத்து இந்திரன், பிரம்மா, அக்னி உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து, 'இனிமேல் எந்த அஸ்திரங்களாலும் அனுமனை ஒன்றும் செய்ய முடியாது' என்ற வரத்தை அளித்தனர். எனவே ஆஞ்சநேயருக்கு 'அபராஜிதன்' என்ற பெயர் உண்டு. இதற்கு 'வெல்ல முடியாதவர்' என்று பொருள்.
விரதம் இருப்பது எப்படி?
அனுமன் ஜெயந்தி அன்று அதிகாலையில் நீராடி, உணவு உண்ணாமல் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். ராம நாமம் சொல்லி அவரை வழிபடுவதுடன், வெற்றிலை மாலை, வடை மாலை, வெண்ணெய் சாத்தியும் வழிபாடு செய்ய வேண்டும். மேலும் வீட்டில் உள்ள ஆஞ்சநேயர் படத்திற்கு தீபாராதனை ஏற்றி வழிபடுங்கள். அனுமனின் வாலில் சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து வழிபடுவது சிறப்பு. காலை உணவாக பொரியும், பழமும் சாப்பிட வேண்டும். பகல் உணவாக கிழங்கு, காய்கறிகளை உண்ண வேண்டும். இரவில் ஆஞ்சநேயா் திருநாமங்களைச் சொல்லி விரதத்தை முடிக்க வேண்டும்.
(ஒவ்வொரு நாமாவைச் சொல்லி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்)
ஓம் மர்க்கடேசாய நம: பாதெள பூஜயாமி (கால்)
ஓம் மஹோத்ஸஹாய நம: குல்பௌ பூஜயாமி (கணுக்கால்)
ஓம் மஹாக்ஷுத்ர நிபர்ஹணாய நம: ஜங்கே பூஜயாமி (முழங்கால்)
ஓம் ச'த்ருஸம்ஹாராய நம: ஜானுனீ பூஜயாமி (முட்டி )
ஓம் ராமதூதாய நம: ஊரூ பூஜயாமி (தொடை)
ஓம் மஹாதீராய நம: கடிம் பூஜயாமி (இடுப்பு)
ஓம் ருத்ரவீர்யாய நம: குஹ்யம் பூஜயாமி (மர்மம்)
ஓம் அஞ்சனாகர்பஸம் பூதாய நம: நாபிம் பூஜயாமி (தொப்புள்)
ஓம் வாயுபுத்ராய நம: உதரம் பூஜயாமி (வயிறு)
ஓம் குமாரப்ரம்மசாரிணே நம: வக்ஷ பூஜயாமி (மார்பு)
ஓம் துஷ்டக்ரஹ விநாசாய நம: ஹ்ருதயம் பூஜயாமி (நெஞ்சு)
ஓம் மஹாபல பராக்ரமாய நம: ஸ்கந்தௌ பூஜயாமி (தோள்)
ஓம் ஜிதேந்த்ரியாய நம: கண்டம் பூஜயாமி (கழுத்து)
ஓம் ஸீதாசோ காபஹாரிணே நம: ஹஸ்தான் பூஜயாமி (கைகள்)
ஓம் லக்ஷ்மணப்ராணதாத்ரே நம: பாஹும் பூஜயாமி (புஜதண்டம்)
ஓம் காகுஸ்த தூதாய நம: முகம் பூஜயாமி (முகம்)
ஓம் ருத்ரமூர்த்தயே நம: நாஸிகாம் பூஜயாமி (மூக்கு)
ஓம் வஜ்ர தேஹாய நம: அக்ஷிணீ பூஜயாமி (கண்கள்)
ஓம் ராமப்ரியாய நம: கர்ணௌ பூஜயாமி (காதுகள்)
ஓம் கோடிந்து ஸூர்யப்ரபாய நம: சிர: பூஜயாமி (தலை)
ஓம் மாருதாத்மஜாய நம: ஸர்வாண்யங்கானி பூஜயாமி (முழுவதும்)
அனுமனின் மாலா மந்திரம் ஓம் நமோ ஹரிராம தூதா, ஆஞ்ஜநேயா, அதிபல பராக்ரம சூரா, அந்தரண்டபகிரண்ட சண்ட பிரசண்ட உத்தண்ட கோலாஹல, அகோர சத்ரு சம்ஹாரா, வரம் தேஹி க்ருபா தயாளா, சிவ சிவ யோகாசன ப்ரியா, வாயு குமாரா, ஸீதா லக்ஷ்மி ஸுதா ஸுதா, சாயா பராக்ரம விஸ்வரூபா, ஓம்காரா ஆங்கார ஹ்ரீங்கார, சஞ்ஜீவராயா, ஸர்வ மோக்ஷகரணா, ஸஹஸ்ரநாம அலங்கிருத பூஷணா, ப்ரஹ்ம வரப்ரஸாத அனுகூலா, ப்ருண்ட கால ருத்ரா பக்தி விஸ்வாஸ சுத்த வசீகரா, ஸுக்ருத குணசீலா, அம்ருத காலஞான பரமாத்மா, பரம விமோசனா, பம்பம்பம், ரரர, ரிரிரி, நமச்சிவாய ஹனுமந்தா மம, வசி ஸ்வாஹா.