கோவிலில் விபூதி வாங்கும் போது செய்யக்கூடாத தவறுகள்...
- விபூதி திருநீறு என்றும் அழைக்கப்படும்.
- விபூதி தரித்துக்கொள்வதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன.
விபூதி திருநீறு என்றும் அழைக்கப்படும். சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் நெற்றியில் தரித்துக்கொள்வது திருநீறு. விபூதி தரித்துக்கொள்வதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. மேலும், ஒருவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் முடிவில் பிடி சாம்பல்தான் என்ற தத்துவத்தையும் நமக்கு உணர்த்துவதாகத் திகழ்கிறது.
விபூதியை அணிவதற்கும் சில விதிமுறைகள் அனுஷ்டானங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
* கோவிலில் விபூதிப் பிரசாதம் வாங்கும் போது ஒற்றை கையை மட்டும் நீட்டி வாங்கக்கூடாது.
* வலக்கையின் கீழே இடக்கையைச் சேர்த்து வைத்து தான் விபூதியை வாங்க வேண்டும்.
* விபூதியை வாங்கும் போது "திருச்சிற்றம்பலம்" என்றும், விபூதியை நெற்றியில் இடும் போது "பஞ்சாட்சர" மந்திரத்தையும் ஜபிக்க வேண்டும்.
* விபூதியை நெற்றி முழுவதுமோ அல்லது மூன்று படுக்கை வசக் கோடுகளாகவோ தரிக்கவேண்டும்.
* காலையிலும் மாலையிலும், கோயிலுக்குச் செல்லும்போதும், இரவு படுக்கப்போகும் முன்பும் விபூதி தரித்துக்கொள்ளலாம்.
* விபூதியை இடக்கையில் கொட்டி, அதிலிருந்து எடுத்து நெற்றியில் இடக்கூடாது.
* வலக்கையில் உள்ள விபூதியை அப்படியே நெற்றியில் இட வேண்டும். வலக் கையின் நடுவில் உள்ள மூன்று விரல்களால் விபூதியை எடுத்து தலையை நிமிர்த்தி அணிந்துகொள்ளவேண்டும்.
* அவ்விதம் செய்ய இயலாவிட்டால், ஒரு சிறுதாளில் விபூதியை இட்டு, அதிலிருந்து எடுத்து நெற்றியில் வைக்கலாம்.
* வயதில் நம்மைவிட இளையவர் கைகளிலிருந்து விபூதியை எடுத்து வைக்கக்கூடாது.
* விபூதியை நம் கையில் இடச் செய்து, அதிலிருந்து தான் எடுத்து நம் நெற்றியில் இட வேண்டும்.
* குங்குமத்தை இளையவர் கைகளிலிருந்து எடுத்து நெற்றியில் வைக்கலாம்.
* நடந்து கொண்டோ, படுத்துக் கொண்டோ விபூதியை வைக்கக்கூடாது. ஆச்சாரியார், சிவனடியார் இவர்களிடம் விபூதியை பெறும்போது அவர்களை வணங்கி விட்டு பெற வேண்டும்.
* கிழக்கு பார்த்தோ அல்லது வடக்கு திசை நின்று தான் விபூதி இட வேண்டும்.
* திருநீறு அணிவதால், மனதில் இறைபக்தி மேலோங்கி, நம்மிடம் இருக்கும் தீய எண்ணங்களை விலக்கும்.