வழிபாடு
ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ விழா இன்று நடக்கிறது
- மாலை 4.45 மணிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் 108 சங்காபிஷேகம் நடக்கிறது.
- இரவு 7 மணிக்கு அன்னதானம் நடைபெற உள்ளது.
ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சனிபிரதோஷ விழா இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பிற்பகல் 3 மணிக்கு ஹோமங்களும், 108 சங்கு பூஜை, மாலை 4.45 மணிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் 108 சங்காபிஷேகமும், 6 மணிக்கு அலங்கார தீபாராதனை, பிரதோஷ நாயகர் கோவிலை சுற்றி வலம் வருதலும் நடக்கிறது.
அதனை தொடர்ந்து 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், பிரசாதமும் வழங்கப்படுகிறது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு அன்னதானமும் நடைபெற உள்ளது. பூஜைகளை கோவில் மேல் சாந்தி பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் நடத்துகிறார்.
இதற்கான ஏற்பாட்டை திருக்கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.