திருப்பதி கோவிலில் ஆர்ஜித சேவா தரிசன டிக்கெட் வெளியீடு
- ரூ 5.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை தரிசன டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
90 நாட்களுக்கு முன்பு பக்தர்கள் தங்களது திருப்பதி பயணத்தை முன்பதிவு செய்து கொள்ளும் விதமாக டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன.
அக்டோபர் மாதத்திற்கான சுப்ரபாதம் தோமாலை அர்ச்சனை அஷ்டதல பாத மாறாதன சேவைக்காளை காண இன்று காலை 10 மணிக்கு டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.
ஆர்ஜித சேவை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் வருகிற 20-ந் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். பின்னர் நடைபெறும் ஆன்லைன் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு குறுந்தகவல்கள் அனுப்பப்படும். தகவல் பெற்ற பக்தர்கள் தங்கள் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும்.
கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரமோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவைகளை காண டிக்கெட்டுகள் வரும் 21-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது அக்டோபர் மாதத்துக்கான அங்கப்பிரதட்சணம் டோக்கன் ஒதுக்கீடு வரும் 24-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
பக்தர்கள் https:tiripati balaji.ap.gov.in என்ற இணையதளத்தில் சேவை டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருப்பதியில் நேற்று 71,894 பேர் தரிசனம் செய்தனர். 25,208 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 5.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.