வழிபாடு

ஒருவர் பிறந்த திதியும்...அவரின் குணநலன்களும்...

Published On 2023-06-10 08:46 GMT   |   Update On 2023-06-10 08:46 GMT
  • நம் தினசரி காலண்டரில் அன்றைய திதி, நட்சத்திரம் என்ன என்பது குறிப்பிடப்பட்டிருக்கும்.
  • திதிகளின் அடிப்படையிலேயே ஒவ்வொரு நாளின் பலன்களும் குறிப்பிடப்படுகிறது.

வளர்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும், தேய்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும் வருகின்றன. இந்தப் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையும் பௌர்ணமியும் மாதமொரு முறை மாறி மாறி வந்து போகின்றன.

பிரதமையில் பிறந்தவர்கள், எதையும் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும் ஆற்றல் உடையவர்கள்.

துவிதியையில் பிறந்தவர்கள், உண்மையை பேசுபவர்கள். பொய் பேசுவது அரிது.

திருதியையில் பிறந்தவர்கள், தான் நினைக்கும் காரியத்தை செய்து முடிப்பவர்கள்.

சதுர்த்தியில் பிறந்தவர்கள், மந்திர சக்தியில் விருப்பம் உடையவர்கள்.

பஞ்சமியில் பிறந்தவர்கள், பொன் ஆசை உடையவர்கள்.

சஷ்டியில் பிறந்தவர்கள், செல்வந்தராக விருப்பப்படுவார்கள்.

சப்தமியில் பிறந்தவர்கள், மற்றவர்களின் மேல் இரக்க குணம் உடையவர்கள்.

அஷ்டமியில் பிறந்தவர்கள், குழந்தைகளின் மேல் மிகவும் அன்பு உடையவர்கள்.

நவமியில் பிறந்தவர்கள், அதிக புகழ் பெறுவதில் நாட்டம் உடையவர்கள்.

தசமியில் பிறந்தவர்கள், ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக விளங்குவார்கள்.

ஏகாதசியில் பிறந்தவர்கள், புதுமையான தொழில்களில் செய்வதில் அதிக ஆர்வம் உடையவர்கள்.

திரயோதசியில் பிறந்தவர்கள், உறவினர்களிடம் அதிகம் பேச மாட்டார்கள்.

பௌர்ணமியில் பிறந்தவர்கள், தெளிவான சிந்தனை உடையவர்கள்.

அமாவாசையில் பிறந்தவர்கள், தன் அறிவை மேலும் பெருக்கிக்கொள்வதிலேயே ஆர்வம் உடையவர்களாக இருப்பர்.

Tags:    

Similar News