பிரம்மோற்சவ விழா: திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் கணபதி பூஜை
- 30-ந்தேதி காலை தேரோட்டம் நடக்கிறது.
- ஜூன் 1-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.
காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்வது வழக்கம். சனீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா வருகிற 16-ந் தேதி கொடியேற்றத்துடன தொடங்குகிறது. இதையொட்டி நேற்று கணபதி பூஜை நடந்தது.
முன்னதாக இரட்டை விநாயகருக்கு திரவியப்பொடி, மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து புனிதநீர் கொண்டு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அடியார்கள் நால்வர் புஷ்பப் பல்லாக்கில் வீதியுலா மே 23-ந் தேதியும், மே 30-ந் தேதி காலை தேரோட்டமும், 31-ந் தேதி சனீஸ்வரர் பகவான் தங்க காக்கை வாகனத்தில் சகோபுர வீதியுலாவும், ஜூன் 1-ந் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.