வழிபாடு

தசரா விழாவுக்காக சாமுண்டீஸ்வரி அம்மன் தங்க சிலை சாமுண்டி மலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

Published On 2022-09-14 05:32 GMT   |   Update On 2022-09-14 05:32 GMT
  • சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை தங்கத்தால் ஆனது.
  • சாமுண்டீஸ்வரி அம்மன் சிலைக்கு நவராத்திரி வரை சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

மைசூரு தசரா விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் அபிமன்யு உள்பட 14 யானைகளுக்கும் பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் தங்க அம்பாரியை அபிமன்யு என்ற யானை சுமக்க உள்ளது.

இதில் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை தங்கத்தால் ஆனது. மைசூரு அரண்மனை பாதுகாப்பு அறையில் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மைசூரு அரண்மனை பாதுகாப்பு அறையில் இருந்து அம்மன் சிலை எடுக்கப்பட்டு சுத்தப்படுத்தி விசேஷ பூஜை செய்து சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

அப்போது அரண்மனை மண்டல இயக்குனர் சுப்பிரமணியா, கோவில் நிர்வாக அதிகாரி கோவிந்தராஜு ஆகியோர் இருந்தனர். தசரா விழா தொடக்க நாளான 26-ந்தேதி சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை அலங்கரித்து நவராத்திரி வரை சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

விஜயதசமி நாளன்று நடக்கும் ஜம்பு சவாரி ஊர்வலத்திற்காக கோவிலில் இருந்து அரண்மனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அம்மன் சிலை கொண்டுவரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News