சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரம் கால் மண்டபம்
- இந்த ஆயிறங்கால் என்பது 999 கால்கள் மட்டுமே இருக்கின்றன.
- இந்த ஆலயத்திலே கம்பராமாயணம் அரங்கேற்றப்பட்டது.
சிதம்பரத்தில்ஆயிரங்கால் மண்டபத்தின் முன்னதாக நடன மண்டபம் என்று அமைப்பு இருக்கிறது. இந்த ஆயிறங்கால் என்பது 999 கால்கள் மட்டுமே இருக்கின்றன. நடராஜர் ஆண்டுக்கு 2 முறை அங்கே வந்து தரிசனம் கொடுப்பதால் அந்த ஒரு காலில் நின்று அருள் அளிப்பதால் அதனைசேர்த்து ஆயிரங்கால் என்று நம்முடைய முன்னோர்கள் சகஸ்ராரம் என்கிற வடமொழியை இங்கே நிரூபித்து இருக்கிறார்கள்.
இந்த இடத்திலே சுவாமி ராஜ சபா காட்சி அருள்கிறார். 5 சபைகளிலே இது ராஜசபை என்று அழைக்கப்படுகிறது. இந்த ராஜ சபையில் ஆனந்த நடராஜர் ஆண்டிற்கு இரண்டு முறை அபிஷேகம் கொள்கிறார் அதனை தொடர்ந்து அலங்காரங்கள் செய்யப்பட்டு ஆனித் திருமஞ்சன தரிசனக் காட்சியும் ஆருத்ரா தரிசன காட்சியும் அருள்கிறார். அவ்வளவு சிறப்பு மிக்க இந்த ஆயிரம் கால் மண்டபத்தில் பெரியபுராணம் ஓராண்டு காலம் சொற்பொழிவு செய்யப்பட்டது.
அதுமட்டுமின்றி இந்த ஆலயத்திலே கம்பராமாயணம் அரங்கேற்றப்பட்டது. ஆயிரங்கால் மண்டப முகப்பில் நடன மண்டபம் என்று ஒன்று அமைந்திருக்கிறது. அந்த மண்டபத்தில் ஆனி திருமஞ்சனம் மார்கழி திருவாதிரையன்று நடராஜரும் சிவகாமியும் முன்னும் பின்னுமாக நடனமாடி காட்சி தருவது, கண் கொள்ளா காட்சி.