விளாங்குடி கிறிஸ்து அரசர் ஆலய கொடியேற்றம்
- 19-ந்தேதி இரவு தேர் பவனி நடக்கிறது.
- 20-ந்தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
மதுரை விளாங்குடி செங்கோல் நகரில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா நேற்று மாலை 6 மணிக்கு மதுரை உயர்மறை மாவட்ட முதன்மை குரு ஜெரோம் எரோனிமஸ் கொடியேற்றி வைத்து, சிறப்பு திருப்பலி நிறைவேற்றி, தொடங்கி வைத்தார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து தினமும் மாலை 6 மணிக்கு பல்வேறு தலைப்புகளில் பல்வேறு பங்குகளை சேர்ந்த பாதிரியார்கள் சிறப்பு திருப்பலி நிறைவேற்றுகிறார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 19-ந்தேதி சனிக்கிழமை இரவு திருவிழா சிறப்புத் திருப்பலியும், தொடர்ந்து தேர் பவனியும் நடக்கிறது. மறுநாள்(20-ந்தேதி) காலை நடைபெறும் சிறப்புத் திருப்பலியில் குழந்தைகளுக்கு புது நன்மை வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இதனையடுத்து அன்று கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருளானந்தம் தலைமையில் உதவி பங்குத்தந்தை பென்சிகர், பங்குப்பேரவையினர் செய்துள்ளனர்.