வழிபாடு

அமிர்த கலசத்துடன் இருக்கும் கருடன்!

Published On 2024-06-21 02:30 GMT   |   Update On 2024-06-21 02:30 GMT
  • கருவறையில் கருடன் அமிர்த கலசத்தை ஏந்தி காட்சி தருகிறார்.
  • கருடன் ஐந்தரை அடி உயரத்தில் மிக கம்பீரமாகக் காட்சி தருகிறார்.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், வெள்ளமசேரி என்ற சிறிய கிராமத்தில், சுமார் 1800 ஆண்டுகள் பழமையான கருடன் ஆலயம் உள்ளது. இதை 'கருடன் காவு' என்கின்றனர்.

பாம்புக் கடிக்கு இந்த ஆலயத்தில் ஒரு மண்டலத்திற்கு வழிபாடு செய்தால் பூரணமான குணம் ஏற்படும் என்பது நம்பிக்கை.

இங்கு கருவறையில் கருடன் தன் இரு கரங்களில் தன்வந்திரி பகவான் போன்றே அமிர்த கலசத்தை ஏந்தி காட்சி தருகிறார்.

இதே போன்று கருட பகவானுக்குரிய இன்னொரு அரிய ஆலயம், கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், கோலாதேவி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் கருடன் ஐந்தரை அடி உயரத்தில் மிக கம்பீரமாகக் காட்சி தருகிறார். ராமாயண காலத்தோடு தொடர்பு கொண்டதாகக் கருதப்படும் கோலாதேவி கருட சுவாமி ஆலயத்தை, ராமானுஜர் பிரதிஷ்டை செய்ததாகக் கூறுகின்றனர்.

சீதா தேவியை ஸ்ரீ ராம-லட்சுமணர் தேடிச் சென்றபோது ராவணனால் வெட்டப்பட்டு வீழ்ந்து கிடந்த ஜடாயுவைக் கண்டனர். இறந்த ஜடாயுவுக்கு ராமர் நீத்தார் கடன் நிறைவேற்றிய இடமே இந்த கோலா தேவி என்று இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

Tags:    

Similar News