- பக்தர்கள் அதிக அளவில் தர்ப்பணம் செய்வார்கள்.
- திருப்பூந்துருத்தி தலம் ஆடி அமாவாசைக்கு ஏற்ற தலம் தான்.
புனித தீர்த்தங்களான காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, திருச்சி முக்கொம்பு, மயிலாடு துறை நந்திக்கட்டம், திருவையாறு தீர்த்தக் கட்டம், பவானி முக்கூடல், பாப நாசம், சொரி முத்து அய்யனார் கோவில், ஏரல் சேர்மன் சுவாமிகள் கோவில் ஆறு உள்பட பல நீர்நிலைகளில் ஆடி அமாவாசை தினத்தன்று பக்தர்கள் அதிக அளவில் தர்ப்பணம் செய்வார்கள்.
நதிக்கரைகள் மட்டுமின்றி, கடற்கரை தலங்களான ராமேஸ்வரம், தனுஷ் கோடி, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பூம்புகார், வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய கடற்கரை பகுதிகளும் பிதுர் பூஜைகளுக்கு ஏற்றவை. தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் பாதையில் கண்டியூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருத்தலம் திருப்பூந்துருத்தி. இந்த தலமும் ஆடி அமாவாசைக்கு ஏற்ற தலம் தான்.
பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து தர்ப்பணம் செய்வதால் மூதாதையர்களின் தோஷங்களில் இருந்து விடுதலை பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆடி அமாவாசை காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தரவல்லது.
ஆடி அமாவாசை அன்று ராமேஸ்வரம், ராமநாதசாமி கோவிலில் வழிபாடு செய்தால் முழு பலன் கிடைக்கும்.