ஸ்ரீகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் கோவில் திருவிழா 13-ந்தேதி நடக்கிறது
- திருவிழா 13 மற்றும் 14-ந்தேதிகளில் விமர்சையாக நடக்க உள்ளது.
- திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம்.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான ஏழு கங்கையம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இதே போல் இந்த ஆண்டும் ஏழு கங்கையம்மன் கோவில் திருவிழா வருகிற 13 மற்றும் 14-ந்தேதிகளில் கடந்த ஆண்டுகளை போலவே மிக விமர்சையாக நடக்க உள்ளது.
திருவிழா நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் வெளியீட்டு விழா ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, நிர்வாக அதிகாரி சாகர்பாபு மற்றும் அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் வேத பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்து, கற்பூர ஆரத்தி காண்பித்தனர். அதன்பிறகு மேற்கண்ட அனைவரும் ஏழு கங்கையம்மன் கோவில் திருவிழா சுவரொட்டிகளை வெளியிட்டனர்.