வழிபாடு

மார்த்தாண்டம் கரவிளாகம் கிருஷ்ணசாமி கோவில் திருவிழா இன்று தொடங்கியது

Published On 2022-12-16 09:03 GMT   |   Update On 2022-12-16 09:03 GMT
  • திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
  • 24-ந் தேதி பள்ளிவேட்டை நடைபெறும்.

மார்த்தாண்டம் நல்லூர் கரவிளாகத்தில் கிருஷ்ணசாமி கோவில் உள்ளது. இங்கு 49-வது பஜனை பட்டாபிஷேக திருவிழா, இந்து சமய மாநாடு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 25-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

இன்று அதிகாலை 4.15 மணிக்கு நிர்மால்ய பூஜை, 5 மணிக்கு அபிஷேகம், காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமம், 7.30 மணிக்கு கொடியேற்றம், 9 மணிக்கு கலச பூஜை, பகல் 12 மணிக்கு உச்சபூஜை, 12.45 மணிக்கு அன்னதானமும் நடந்தது. இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், 7.45 மணிக்கு பஜனை, 9 மணிக்கு அத்தாழ பூஜை போன்றவை நடக்கிறது.

தொடர்ந்து வருகிற விழா நாட்களில் கணபதி ஹோமம், உஷ பூஜை, பாராயணம், உச்சபூஜை, அன்னதானம், தீபாராதனை, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

18-ந் தேதி காலை 6.20 மணிக்கு கிருஷ்ணசாமி கருட வாகனத்தில் பவனி வருதல், 9 மணிக்கு சமய வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பண்பாட்டு போட்டிகள், 20-ந் தேதி காலை 8 மணிக்கு பொங்கல் வழிபாடு, 21-ந் தேதி இரவு 7 மணிக்கு இந்து சமய மாநாடு, 22-ந் தேதி இரவு 7 மணிக்கு முளை பூஜை, 8.45 மணிக்கு சாமி கருட வாகனத்தில் எழுந்தருளல், 24-ந் தேதி மாலை 3.22 மணிக்கு சாமி பவனி வருதல், இரவு 10 மணிக்கு பள்ளிவேட்டை போன்றவை நடைபெறும்.

விழாவின் இறுதி நாளான 25-ந் தேதி அதிகாலை 4.45 மணிக்கு நிர்மால்ய பூஜை, 5.30 மணிக்கு அபிஷேகம், காலை 6.30 மணிக்கு உஷபூஜை, 9 மணிக்கு கீதாபாராயணம், பகல் 12.45 மணிக்கு அன்னதானம், மாலை 3.30 மணிக்கு ஆராட்டு பூதபலி, 4 மணிக்கு ஆராட்டு விழா, இரவு 8.10 மணிக்கு தீபாராதனை, 8.45 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News