வழிபாடு

ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடக்கம்

Published On 2022-11-12 08:17 GMT   |   Update On 2022-11-12 08:17 GMT
  • ஈரோட்டில் கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவில் உள்ளது.
  • இந்த கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஈரோடு கோட்டை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நிறைவுற்று 12 ஆண்டுகள் ஆகி விட்டதால், கடந்த 2019-ம் ஆண்டு கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திருப்பணிகள் தொடங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகளை தொடங்க உத்தரவிட்டனர்.

அதன்படி கும்பாபிஷேகம் நடந்த நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு இறை அனுமதி பெறப்பட்டது. அதைத்தொடர்ந்து மகா சங்கல்யம், வாசுதேவ புன்யாஹவசனம், பஞ்ச கவ்ய பூஜை, வாஸ்து சாந்தி, கும்ப பூஜைகளும், இரவு 9 மணிக்கு தீபாராதனையும் நடந்தது.

பாலாலய நிகழ்ச்சி நேற்று காலை 8.40 மணிக்கு நடந்தது. அப்போது கஸ்தூரி அரங்கநாதர், பரிவார மூர்த்திகள் மற்றும் அனைத்து விமான ராஜ கோபுரங்களும் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன. முன்னதாக காலை 6.15 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, சேவாகாலம், கும்ப ஆராதனை, மூர்த்தி மந்தர தத்வ ஹோமம், காலை 7.45 மணிக்கு பூர்ணாஹுதி, யாத்ரா தரிசனம், கலசங்கள் புறப்பாடு நடந்தது. இதில் ஈரோடு மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News