கோனியம்மன் ஆலயம் - 25 ருசிகர தகவல்
- கோனியம்மனுக்கு தினமும் காலையில் மட்டும் அபிஷேகம் நடத்தப்படுகிறது.
- இத்தலத்து பஞ்ச முக விநாயகர் 10 கரங்களுடன் காட்சி அளிக்கிறார்.
1. கோனியம்மன்கோவில் 13-ம் நூற்றாண்டில் உருவானதாகும். ஆனால் 600 ஆண்டுகளுக்கு முன்பு தான் அங்கு ஆலயம் கட்டப்பட்டது.
2. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
3. ஆடி மாதம் முழுவதும் இத்தலத்தில் நடத்தப்படும் ஊஞ்சல் உற்சவம் மிகவும் விசேஷமாகும்.
4. மாசி மாதம் 14 நாட்கள் பெரிய விழா நடத்தப்படும். அப்போது தேரோட்டம் நடத்தப்படும். கோவையில் இத்தலத்தில் மட்டுமே தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.
5. பக்தர்கள் தாம்வேண்டுதல் நிறைவேறியதும் சாமிக்கு வஸ்திரம் சாத்தி வழிபடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
6. மாவிளக்கு போடுவது, பொங்கல் வைத்து வழிபடுவதும் இத்தலத்தில் அதிகம் நடக்கிறது. ஆனால் பொங்கல் பிரசாதத்தை கோவில் வளாகத்தில் வைத்து பக்தர்களுக்கு கொடுக்க தடை செய்யப்பட்டுள்ளது.
7. பராசக்தியின் கோப ஆவேச கூறு என்று அழைக்கப்படும் துர்க்கா தேவியின் அம்சமாக கோனியம்மன் கருதப்படுகிறார்.
8. இத்தலத்தில் வேப்பமரம், வன்னிமரம் , நாகலிங்க மரம், அரச மரம் ஆகியவைஉள்ளன. இம்மரங்கள் தேவ மரங்களாக கருதப்படுகின்றன . இதில் வன்னிமரம் தல விருட்சமாக உள்ளது.
9. மனஅமைதி பெற விரும்பும் பெண்கள், இத்தலத்தில் உள்ள நாகலிங்கம் மரத்தின் கீழ் அமர்ந்து தியானம் இருப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
10. மாசித் திருவிழாவின் போது தீ குண்டம் இட்டு விட்டால் யாரும் ஊரைவிட்டு வெளியே செல்ல மாட்டார்கள்.
11. இத்தலத்து கோனியம்மனுக்கு தினமும் காலையில் மட்டும் அபிஷேகம் நடத்தப்படுகிறது. 7 மணி முதல் 7.30 மணிக்குள் அபிஷேகம் நடந்து விடும். இந்த அபிஷேக தீர்த்தங்கள் நோய்களை தீர்க்கும் மருந்து என்று கருதி பக்தர்கள் வாங்கி அருந்துகிறார்கள்.
12. அருணகிரி நாதர் இத்தலத்து முருகனை புகழ்ந்து பாடல் எழுதியுள்ளார். அந்த பாடல் முருகப்பெருமான் சன்னதி வாயிலில் கல்வெட்டாக வைக்கப்பட்டுள்ளது.
13. தினமும் மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெறும் போது பக்தர்கள் பூ கட்டி போடும் உத்தரவு கேட்கும் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட் டுள்ளது. சிவப்பு, வெள்ளை கலரில் பூ கட்டி அம்மன் பாதத்தில் போடுவார்கள். பிறகு ஒரு பொட்டலத்தை பிரித்து பார்ப்பார்கள். வெள்ளை பூ வந்தால் நினைத்த காரியம் செய்ய கோனியம்மன் உத்தரவு கொடுத்து விட்டாள் என்று அர்த்தமாகும்.
14. நவராத்திரி திருவிழா இத்தலத்தில் சிறப்பாக நடத்தப்படுகிறது.விஜய தசமி அன்று கூப்பிடு விநாயகர் ஆலயத்தில் இருந்து சென்று அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். கோட்டை சென்ற கலிய வரத பெருமாள், தண்டுமாரியம்மன் ஆகியோருடன் கோனியம்மன் அணிவகுப்பாள். மற்ற தெய்வங்கள் புடை சூழ அம்பு போடுவது கோனியம்மன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
15. துர்க்கை சன்னதியில் செவ்வாய் தோறும்ராகு காலத்தில் நடத்தப்படும் பூஜை மிக சிறப்பான தாக கூறப்படுகிறது.
16. கோனியம்மனுக்கு தினமும் காலை நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், மதியம் தயிர் சாதம், இரவுவெண் பொங்கல் படைக்கப்படுகிறது.
17. சத்ரு சம் ஹாரத்துக்காக இத்தலத்தில் சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது.
18. இத்தலத்து உற்ச வர் சிலை மிகவும் பழமை யானது. ஐம்பொன் னால் செய்யப்பட்ட இந்த சிலையில் நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்து பள்ளமே விழுந்து விட்டது இதன் மூலம் இந்த உற்சவரின் பழமை சிறப்பை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
19. நவக்கிரகங்களும் இங்கு தம்பதியருடன் வீற்றிருப்பதால் அவர்களை சுற்றி வந்தால் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும் என்பது ஐதீகமாகும்.
20. இத்தலத்து நவக்கிரகங்களில் சூரியபகவான் மேற்கு நோக்கி இருப்பது தனிச்சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது.
21. இக்கோவில் கோவை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும், கோவை ரெயில் நிலையத்தில் இருந்து நடந்து வரும் தூரத்திலும் அமைந்துள்ளது.
22. இத்தலத்து வாகனங்களில் புலி வாகனம், வெள்ளை யானை வாகனம், கிளி வாகனம், சிம்மவாகனம் வித்தியாசமானவை.
23. இத்தலத்து பஞ்ச முக விநாயகர் 10 கரங்களுடன் காட்சி அளிக்கிறார்.
24. கோனியம்மனை கொங்கு நாட்டு இளவரசி என்று கொங்கு நாட்டு மக்கள் அன்போடு சொல்கிறார்கள்.
25. கோனியம்மன் ஆலயத்தில் காமிக ஆகம விதிப்படி பூஜைகள் நடத்தப்படுகிறது.