கூடலழகர் பெருமாள் கோவிலுக்கு தங்க குதிரை வாகனம்
- குதிரை வாகனம் 6 அடி நீளமும், 5 அடி உயரமும் கொண்டது.
- உள்ளே தேக்குமரத்தாலும், கீழ் தளத்தில் கோங்கு மரத்தால் உருவாக்கப்பட்டது.
மதுரையை சேர்ந்த பெண் பக்தர் ஹரிணி, தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் கூடலழகர் கோவிலுக்கு வந்த போது அங்குள்ள மரத்தினால் ஆன குதிரை வாகனத்தை கண்டார். மேலும் அவருக்கு அழகர்கோவில் உள்ள தங்க குதிரை போன்று கூடலழகர் பெருமாள் கோவிலிலும் தங்க குதிரை வாகனம் செய்ய நினைத்தார்.
இது குறித்து கோவில் அதிகாரியிடம் தனது எண்ணத்தை தெரிவித்தார். அவர்களும் அதற்கு ஒப்புதல் அளித்தனர். அதை தொடர்ந்து ஸ்பதியான செல்வராஜ், அவரது அண்ணன் தங்கத்துரையிடம் இந்த குதிரை வாகனம் செய்யும் பணி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டது. தற்போது குதிரை வாகனம் செய்து கோவிலில் நேற்று முன்தினம் மாலை ஒப்படைக்கப்பட்டது. அதை தொடர்ந்து அன்று இரவு புதிய தங்க குதிரை வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்தார். இது குறித்து ஸ்பதி செல்வராஜ் கூறும் போது:-
குதிரை வாகனம் 6 அடி நீளமும், 5 அடி உயரமும் கொண்டது. உள்ளே தேக்குமரத்தாலும், கீழ் தளத்தில் கோங்கு மரத்தால் உருவாக்கப்பட்டது. 18 கிலோ தாமிர தகட்டை பாலீஸ் செய்து, அதனை பாண்டிய நாட்டு சிறப்புபடி உருவாக்கப்பட்டு உள்ளது. அதன் மீது தங்க முலாம் பூசி குதிரை வாகனத்தை உருவாக்கினோம் என்றார்.