வழிபாடு

கூடலழகர் பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published On 2023-02-22 08:06 GMT   |   Update On 2023-02-22 08:06 GMT
  • 6-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது.
  • 7-ந்தேதி தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

108 திவ்ய தேசங்களில் 47-வது திவ்ய தேசமாக கருதப்படும், மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் மாசி மகம் தெப்பத்திருவிழா தொடங்குகிறது. நிகழ்ச்சியின் தொடக்கமாக 23-ந் தேதி மாலை விசுவசேனர் புறப்பாடு, வாஸ்து சாந்தி நடைபெறுகிறது.

தொடர்ந்து 24-ந் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. மேலும், தினசரி காலையில் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் வியூக சுந்தரராஜ பெருமாள் பல்லக்கிலும், மாலையில் அனுமார் வாகனம், கருடவாகனம், சேஷவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

5-ந் தேதி மாலை டவுன்ஹால் ரோட்டில் உள்ள கோவில் தெப்பக்குளத்தில் தெப்பம் முட்டு தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா 6-ந் தேதி இரவு தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வியூக சுந்தர்ராஜ பெருமாள் தெப்பக்குளத்துக்குள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

7-ந் தேதி ஹேம புஷ்கரணி குளத்தில் தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News