செண்பகவல்லி அம்மன் கோவில் தேரோட்டம்
- 22-ந்தேதி செண்பகவல்லி அம்மன் பூவனநாத சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.
- 22-ந்தேதி பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் காலை 8 மணி மற்றும் இரவு 7.30 மணிக்கு பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது. நேற்று 9-ம் நாள் திருவிழாவை யொட்டி காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
காலை 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும், 5.30 மணிக்கு அம்மன் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. காலை 9 மணி அளவில் வணிக வைசிய சங்கம் சார்பில் தேரோட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், துணைத் தலைவர் பரமசிவன், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்க மாரியப்பன், பழனி குமார் மற்றும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.
தேர் ரதவீதிகள் வழியாக மேளதாளம் முழங்க காலை 11.40 மணிக்கு நிலையை வந்தடைந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி தலைமையில் ஆய்வாளர் சிவகலை பிரியா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். இரவு அம்மன் திருவீதி உலா நடந்தது.
22-ந்தேதி இரவு 7.30 மணிக்கு மேல் 8.15-க்குள் செண்பகவல்லி அம்மன் பூவனநாத சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து பூவனநாதர் யானை வாகனத்திலும், செண்பகவல்லி அம்மன் பல்லக்கிலும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.