வழிபாடு

நல்லது நடக்க நம்பிடுவோம் சனிபகவானை!

Published On 2023-12-20 03:00 GMT   |   Update On 2023-12-20 03:00 GMT
  • இது வாக்கிய கணித ரீதியான சனிப்பெயர்ச்சியாகும்.
  • சனிப்பெயர்ச்சி கடக ராசிக்கு அஷ்டமத்துச் சனியாக வருகின்றது.

`மந்தன் செய்வதைப் போல மகேஸ்வரன் கூடச் செய்யமாட்டான்' என்பது பழமொழி, அப்படிப்பட்ட சனி பகவான் இப்பொழுது பெயர்ச்சியாகி கும்ப ராசிக்குச் செல்கின்றார்.

கும்பச் சனியின் சஞ்சாரம்!

சனி பகவான் சுபஸ்ரீ சோபகிருது வருடம் மார்கழி மாதம் 4-ந் தேதி (20.12.2023) புதன்கிழமை அன்று மாலை 5.23 மணி யளவில் அவிட்டம் நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் தன் சொந்த வீடான கும்ப ராசிக்குப் பெயர்ச்சியாகின்றார். அங்கு 6.3.2026 வரை வீற்றிருந்து பலன்களை வழங்குவார்.

அவரது அருட்பார்வை மேஷம், சிம்மம், விருச்சிகம் ஆகிய ராசிகளில் பதிகின்றது. இது வாக்கிய கணித ரீதியான சனிப்பெயர்ச்சியாகும். இந்த சனிப்பெயர்ச்சி கடக ராசிக்கு அஷ்டமத்துச் சனியாக வருகின்றது.

சிம்ம ராசிக்கு கண்டகச் சனியாக வருகின்றது. விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியாக வருகின்றது. மகர ராசிக்கு குடும்பச் சனியாகவும், கும்ப ராசிக்கு ஜென்மச் சனியாகவும் வருகின்றது. மீன ராசிக்கு ஏழரைச் சனியாக வருகின்றது.

இதுவரை அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கத்தில் இருந்த மிதுன ராசிக்கு அது விலகுகின்றது. கடக ராசிக்கு கண்டகச்சனி விலகுகின்றது.

துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியும், தனுசு ராசிக்கு ஏழரைச் சனியும் விலகுகின்றது.

சனி விலகும் ராசிக்காரர்கள், நள சக்கரவர்த்திக்கு சனி விலகி அருள் கொடுத்த தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு வருவது நல்லது.

குரு மற்றும் ராகு-கேது பெயர்ச்சிகள்!

இந்த சனியின் சஞ்சார காலத்தில் 2 முறை குருப்பெயர்ச்சி நிகழவிருக்கின்றது. 1.5.2024-ல் ரிஷப ராசியிலும், 11.5.2025-ல் மிதுன ராசியிலும் குரு சஞ்சரிக்கப் போகின்றார். இடையில் 8.10.2025 முதல் 20.12.2025 வரை வக்ர இயக்கத்தில் கடக ராசிக்குச் செல்கின்றார்.

26.4.2025-ல் கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். இடையில் இரண்டு முறை கும்ப ராசியில் சனி பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு 12 ராசிகளுக்கும் பலன்கள் வழங்கப்பட்டுள்ளது.

வளர்ச்சி தரும் வழிபாடு!

உங்கள் ஊருக்கு அருகிலுள்ள சிவாலயங்களில் இருக்கும் சனி பகவானையும், திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, குச்சானூர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்அருகில் உள்ள பெருச்சிக் கோவில், நல்லிப்பட்டி, திருக்கொடியலூர் போன்ற சிறப்பு தலங்களில் உள்ள சனி பகவானையும் வழிபடலாம்.

சனிபகவான் ஆட்டிவைக்கும் கிரகம் அல்ல, அரவணைக்கும் கிரகம் என்பதை அறிந்து கொள் ளுங்கள். நல்லதே நடக்கும்.

Tags:    

Similar News