வழிபாடு

நாகை அனிச்சியக்குடி முச்சந்தி மகா காளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குட ஊர்வலம்

Published On 2022-10-12 05:23 GMT   |   Update On 2022-10-12 05:23 GMT
  • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
  • இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகை பப்ளிக் ஆபிஸ் ரோட்டில் அனிச்சியக்குடி முச்சந்தி மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பொங்கல் விழா மற்றும் முளைப்பாரி விதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று காலை தர்மகோவில் தெருவில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்ந்து மதியம் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News