வழிபாடு

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் ஒடுக்கு பூஜையில் படைக்கப்படும் உணவு வகைகள்

Published On 2023-03-15 06:48 GMT   |   Update On 2023-03-15 06:48 GMT
  • இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.
  • இந்த கோவிலில் நடக்கும் ஒடுக்கு பூஜை சிறப்பு வாய்ந்தது.

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு பெண்கள் இருமுடி கட்டி வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள். இதனால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் மாசி கொடை விழாவில் நடக்கும் ஒடுக்கு பூஜை சிறப்பு வாய்ந்தது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் ஒடுக்கு பூஜையின் போது உணவு பொருட்களை 9 மண் பானைகளிலும், 2 குடங்களிலும், ஒரு பெட்டிலும் வைத்து நீள வெள்ளை துணியால் மூடி பூசாரிகள் தலையில் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வருவார்கள். அப்போது அவர்கள் தங்களது வாயில் துணி கட்டியிருப்பார்கள்.

இந்த பானைகளில் அரிசி சாதம், சாம்பார், அவியல், எருசேரி, பருப்பு, கிச்சடி, ஊறுக்காய், இஞ்சி, மாங்காய், கீரை ஆகியவையும், 2 குடத்தில் தேனும், ஒரு பெட்டியில் வடை மற்றும் அப்பளமும் எடுத்து வரப்படும். இவற்றை அம்மனுக்கு படையலிட்டு பூஜை நடத்துவார்கள். இதற்குரிய சாதம் ஒரே நாளில் தயாரிக்கப்பட்ட புழுங்கல் அரிசியில் சமைக்கப்பட்டதாகும். இவற்றை தயாரிக்கும் முறை மற்றும் கொண்டு வரும் முறை ஆகியவற்றில் மரபு வழி இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News