தர்ப்பணம் செய்து முடிந்ததும் சொல்ல வேண்டிய மணிகர்ணிகா அஷ்டகம்
- நாட்டில் மொத்தம் 4 மணிகர்ணிகா தீர்த்தங்கள் உள்ளன.
- மணிகர்ணிகா அஷ்டகத்துதியை மூன்று முறை படிக்க வேண்டும்.
தர்ப்பணம் செய்து முடிந்ததும் ஸ்ரீ ஆதி சங்கரர் சொல்லிய ஸ்ரீ மணிகர்ணிகா அஷ்டகம் என்ற துதியை மணிகர்ணிகா குளத்தில் குளித்த பிறகு கூற வேண்டும்.
அவ்வாறு வழிபட்டு பித்ரு தர்ப்பணமும் செய்பவர்கள் சவுபாக்கிய வாழ்வை வாழ்ந்து புத்திரர் பேரன்களைப் பெற்று இறை நலம் பெறுவார்கள். நாட்டில் மொத்தம் 4 மணிகர்ணிகா தீர்த்தங்கள் உள்ளன.
1. வாரணாசி (காசியில்) விஸ்வநாதர் கோவிலில்- மணிகர்ணிகா கட்டம்.
2. மதுரை திருப்புவனம்- பூவணநாதர் கோவிலில் மணிகணிகாகுளம்.
3. தஞ்சை மாவட்டம் வேதாரண்யம் தர்ப்பாண்யேஸ்வரர் கோவிலில் மணிகர்ணிகா கங்கை.
4. சென்னை திருநீர்மலை ரங்கநாதர் கோவில் மலை அடி வாரத்தில் -மணிகர்ணிகா திருக்குளம் என்னும் புஷ்கரணி.
கந்தனுக்கு சரவணப் பொய்கையையே புனித நீரூற்று என்பது போன்று காசிக்கு சென்று மகாளய தர்ப்பணம் செய்த முழுப்பலனையும் பெற்றிட அவரவர் தகப்பனாரின் திதி நாளன்று மேற்சொன்ன மணிகர்ணிகாகளில் தர்ப்பணம் செய்தோ, அல்லது மகாளய அமாவாசையிலோ தர்ப்பண பூஜை செய்து மணிகர்ணிகா அஷ்டகத்துதியை மூன்று முறை படிக்க வேண்டும்.