வழிபாடு
நாகலாபுரம் வேத நாராயணசாமி கோவிலில் புஷ்ப யாகம்
- புஷ்ப யாகத்தில் பல்வேறு வகையான பூக்கள் மற்றும் மூன்று வகையான இலைகள் பயன்படுத்தப்பட்டன.
- வேத நாராயணசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
திருப்பதி மாவட்டம் நாகலாபுரம் வேதநாராயணசாமி கோவிலில் ஆண்டு தோறும் புஷ்ப யாகம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று மதியம் 3 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை கோவிலில் புஷ்ப யாகம் நடந்தது. புஷ்ப யாகத்தில் பல்வேறு வகையான பூக்கள் மற்றும் மூன்று வகையான இலைகள் பயன்படுத்தப்பட்டன.
முன்னதாக உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, வேத நாராயணசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதில் கோவில் அதிகாரி நாகரத்னா, உதவி அதிகாரி மோகன், கண்காணிப்பாளர் ஏகாம்பரம், கோவில் ஆய்வாளர் சீனிவாசலு மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.