வழிபாடு

வேண்டும் வரம் தரும் பஞ்சமுக ஆஞ்சநேயர்!

Published On 2024-03-17 04:42 GMT   |   Update On 2024-03-17 04:42 GMT
  • பஞ்சமுக ஆஞ்சநேயர் பக்தர்களுக்க ஐந்துவிதமான அனுக்கிரகங்களை வாரி வழங்குகின்றார்.
  • ஸ்ரீ ஆஞ்சநேயர் பரிபூரண கடாட்சம் தருபவர்.

பஞ்சமுக ஆஞ்சநேயர் என்பது, ஆஞ்சநேயர் தனது திருமுகத்தோடு, ஸ்ரீ வராகர், ஸ்ரீ கருடன், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீஹயக்கிரீவர் ஆகிய தெய்வங்களின் திருமுகங்களையும் தனது திருமுகத்தோடு இணைத்துக் கொண்டு பத்து கைகளுடன் விதவிதமான ஆயுதங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர். அத்தகைய சிறப்புமிக்க பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் ஒன்று கோயம்புத்தூரில் நவாவூர் பிரிவு என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

இந்த ஐந்து திருவுருவங்களைக் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர். பக்தர்களுக்க ஐந்துவிதமான அனுக்கிரகங்களை வாரி வழங்குகின்றார். கிழக்கு முகமாகத் தரிசனம் தரும் ஸ்ரீ ஆஞ்சநேயர் பரிபூரண கடாட்சம் தருபவர். இஷ்ட சித்திகளை பக்தர்களுக்கு தருபவர், தெற்குமுகமாக தரிசனம் தரும் ஸ்ரீ நரசிம்மர், எதிரிகளின் தொல்லைகளை அழிக்கவும் மனோதைரியம் பெறவும், அசாதாரண சக்திகளால் ஏற்படும் தொல்லைகளைப் போக்கிக் கொள்ளவும் அருளுகிறார்.

மேற்குமுகமாகத் தரிசனம் தரும் ஸ்ரீ கருட பகவான் சகல சவுபாக்கியங்களும் அருளுகிறார். வடக்குமுகமாகத் தரிசனம் தரும் ஸ்ரீ வராகர் செல்வச் செழிப்பினை பக்தர்களுக்கு வாரி வழங்குகிறார்.

மேல் நோக்கிய பார்வையுடன் காணப்படும் ஸ்ரீ ஹயக்கிரீவர் சகல கலைகளையும், கல்வியையும் கற்றுக்கொண்டு அவற்றில் சிறந்து விளங்க அருளுகிறார். பஞ்சமுக ஆஞ்சநேயர் பக்தர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவதால். பக்தர்கள் இவர் திருத்தலத்திற்கு வந்து மனமுருக வேண்டிச் செல்கின்றனர்.

Tags:    

Similar News