வழிபாடு

உறையூர் பஞ்சவர்ணேஸ்வரசுவாமி கோவிலில் பாலாலயம் நாளை நடக்கிறது

Published On 2022-12-10 08:45 GMT   |   Update On 2022-12-10 08:45 GMT
  • இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
  • இன்று பூர்ணாஹுதி மற்றும் அதனை தொடர்ந்து மகாதீபாராதனை நடக்கிறது.

திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயம் உறையூர் காந்திமதி அம்மன் உடனுறை பஞ்சவர்ணேஸ்வரசுவாமி கோவிலாகும். உதங்க முனிவருக்கு சிவபெருமான் ஒவ்வொரு காலங்களில் ஐந்து வண்ணங்களோடு காட்சி அளித்ததால் ஐவண்ணப்பெருமான் (பஞ்சவர்ணேஸ்வரர்) என அழைக்கப்பட்டார். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இங்கு வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை என்பதால் திருமுக்கீச்சுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தகயை சிறப்பு வாய்ந்த உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மகர லக்னத்தில் காந்திமதி அம்மன் உடனுறை பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் பாலாலயம் நடைபெற உள்ளது.

இதையொட்டி இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, வாஸ்துசாந்தி, விமானம் கலாகர்ஷணம் முதல்கால யாகபூஜை, பூர்ணாஹுதி மற்றும் அதனை தொடர்ந்து மகாதீபாராதனையும் நடக்கிறது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜையும், காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் விமான கடத்தில் இருந்து சித்திர படத்தில் பாலாலயம் மற்றும் மகாதீபாராதனையும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News