பெரியபட்டினம் சந்தனக்கூடு விழா கொடியேற்றம்: அனைத்து மதத்தினர் பங்கேற்பு
- 5 மற்றும் 6-ந்தேதிகளில் சந்தனக்கூடு திருவிழா மற்றும் கந்தூரி விழா நடைபெறுகிறது.
- ஜூலை 14-ந்தேதி கொடி இறக்கம் நடைபெறுகிறது.
பெரியபட்டினத்தில் புகழ்பெற்ற மகான் செய்யதலி ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு மதநல்லிணக்க சந்தனக்கூடு கந்தூரி விழாவையொட்டி தொடக்க நிகழ்ச்சியாக கொடியேற்றம் நடைபெற்றது. இதற்காக ஜலால் ஜமால் பள்ளி வாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ரதம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
குதிரைகள் நடனம், வாணவேடிக்கையுடன் தர்காவை மூன்று முறை வலம் வந்த பின்பு தர்கா மினராவில் அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மவுலீது ஓதப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பெரியபட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த அனைத்து மதத்தினர் திரளாக கலந்து கொண்டனர். வருகிற ஜூலை 5 மற்றும் 6-ந்தேதிகளில் சந்தனக்கூடு திருவிழா மற்றும் கந்தூரி விழா நடைபெறுகிறது. ஜூலை 14-ந்தேதி கொடி இறக்கம் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை தலைவர் ஹாஜா நஜ்புதீன், துணை தலைவர்கள் சிராஜுதீன், இக்மத், சாகுல் ஹமீது, செயலாளர் ஹபிபுல்லா, விழா அமைப்பாளர் அப்துல்மஜீத், பொருளாளர் சகுபர்சாதிக், தொழில் அதிபர் சிங்கம்பஸீர் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.