கார்த்திகையில் கங்காதரனுக்கு சங்காபிஷேகம்
- திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள்.
- சிவபெருமானுக்கு ஸ்ரீசோமநாதர் எனும் திருநாமமும் உண்டு.
கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமை இன்று இந்த திங்கட்கிழமையில் சிவ ஆலயங்களுக்கு அவசியம் செல்ல வேண்டும். இந்த நாளில், சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை செய்து வணங்கினால், மனோபலத்தையும் தெளிவையும் பெறலாம்.
திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள். சிவபெருமானுக்கு ஸ்ரீசோமநாதர் எனும் திருநாமமும் உண்டு. திங்கள் என்றால் சந்திரன். சிவனாரின் தலையில் சந்திரனையும் கங்கையையும் சூடியிருப்பார்.கார்த்திகை சோமவார விரதத்தின் சிறப்பை சிவபெருமானே பார்வதி தேவிக்குச் சொல்லி இருக்கிறார். இந்த விரதத்தைப் போன்று வேறு எந்த விரதத்திலும் சிவபெருமான் திருப்தி அடைய மாட்டார் என்பது ஐதீகம்.
சிவனுக்கு சங்காபிஷேகம் சோமவார நாளில் சிவனாருக்கு நடைபெறும் விசேஷ பூஜையில் கலந்து கொண்டு, சிவ தரிசனம் செய்யுங்கள். சங்காபிஷேகம் சிவாலயங்களில் நடைபெறும். சில கோயில்களில் 108 சங்காபிஷேகமும் 1008 சங்காபிஷேகமும் விமரிசையாக நடைபெறும். சங்காபிஷேகத்தில் சிவ தரிசனம் செய்தால் வாழ்வில் இழந்ததை பெறாலாம்.
சிவனுக்கு விரதம் சோமவார விரதம் எப்படிப்பட்டது என்பதை சிவனே சொல்கிறார். சோமன் என்றால் சந்திரன், அவனுக்கு உரிய தினம் திங்கள் கிழமை. அந்தக் கிழமையை சோம வாரம் என்று குறிப்பிடுவர். பன்னிரண்டு மாதங்களில் கார்த்திகை மாத சோம வாரம் மிகச் சிறப்பானது. இந்த தினங்களில் சிவபெருமானை வழிபட்டு விரதம் இருந்தால் பெருமான் மிகவும் மகிழ்ந்து, திருப்தியடைந்து வேண்டும் வரம் எல்லாம் தந்திடுவார் என்பது முன்னோர் சொன்ன வழி. காரணம், இந்த சோம வார விரதச் சிறப்பை, சிவபெருமானே பார்வதி தேவிக்குச் சொல்லுவதாய் புராணங்களில் கூறப்பட்டுள்ளன.
சந்திரனுக்கு பெருமை சிவனின் ஜடாமுடியில் சந்திரன் அமர்ந்திருந்தான். இதைக் கண்ட பார்வதிக்கு ஆச்சர்யம். தன் சுவாமியின் ஜடா முடியில் சந்திரன் அமரும் பேறு எப்படி வாய்த்தது என்று ஸ்வாமி சந்திரனைத் தாங்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடக் காரணம் என்ன? அதற்கு அவன் செய்த பாக்கியம் என்ன? என்று பரமனிடமே கேட்டாள் பார்வதி. எனக்காக விரதம் இருந்து என்னை மகிழ்வித்தான். அதுவே காரணம் என்றார். அதற்கு பார்வதி தேவியும் மற்றும் அங்கிருந்தவர்களும் தங்களுக்கும் இந்த விரதம் குறித்துக் கூறி தாங்களும் பெருமானின் கடாட்சத்தைப் பரிபூரணமாகப் பெற வழிசெய்யக் கோரினாள்.
சிவனுக்காக விரதம் அதன்படி, சிவபெருமானே, பார்வதி தேவிக்கும் மற்றும் அங்கே கூடியிருந்தவர்களுக்கும் இந்த விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறினார் என்கிறது புராணம்.திங்கட்கிழமையில் அதிகாலையில் குளித்து விரதத்தை தொடங்க வேண்டும். அந்தணரை தம்பதியாய் வரவழைத்து, அவர்களையே பார்வதி, பரமேஸ்வரனாக பாவனை செய்து அவர்களுக்கு தானம் அளித்து ஆசிர்வாதம் பெற வேண்டும். வசிஷ்டர், சோமசர்மன், தன்மவீரியன், கற்கர் ஆகியோர் இதைக் கடைபிடித்து முறையே அருந்ததி, செல்வம், நற்கதி, குழந்தைப் பேறு ஆகியவற்றைப் பெற்று மகிழ்ந்தனர்.