வழிபாடு

விசாலாட்சி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நாளை நடக்கிறது

Published On 2022-09-12 08:34 GMT   |   Update On 2022-09-12 08:34 GMT
  • விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள்.
  • இந்த கோவிலில் தேங்காய் மாலை சாத்தி வழிபடுகிறார்கள்.

மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்றுப்பாலத்தை அடுத்த மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரே உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. விநாயகருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி விழா, இந்த கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள்.

ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாற்றி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால், கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. சங்கடஹர சதுர்த்தி விழாவிற்கான ஏற்பாடுகளை கரு. கருப்பையா செய்து வருகிறார்.

Tags:    

Similar News